26
காவிரிப் பிரச்சினை மீது
உரை : 3
நாள் : 03.03.1970
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஹாண்டே அவர்கள் இன்று பத்திரிகையில் வந்துள்ள செய்தியினைக் குறித்து விவாதிக்க வேண்டுமென்று ஒரு ஒத்திவைப்புத் தீர்மானத்தினை அளித்து அதுபற்றிய கருத்துரைகளை தொகுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
பத்திரிகையில் வந்த செய்தியினுடைய அடிப்படையிலே நாம் இந்தப் பிரச்சினையை ஆராயாமல் காலகட்டத்தில் 1968 ஆம் ஆண்டு முதல் மைசூர் மாநில அதிகாரிகளிடம், மைசூர் மாநில இன்றைய முதல்வர் அவர்களிடம் இந்த அரசின் சார்பில் நானும், ஏனைய அமைச்சர்களும் பல நேரங்களில் கலந்து உரையாடி வந்திருக்கிறோம். அண்மையில் டெல்லியில் பிப்ரவரித் திங்கள் 8-ஆம் நாள் அன்று மைசூர் மாநில முதல் அமைச்சர், தமிழக முதல் அமைச்சர், கேரள முதல் அமைச்சர் அடங்கிய கூட்டத்தினை மத்திய அமைச்சர் திரு. கே. எல். ராவ் அவர்கள் முன்னிலையில் நடத்துவது என்று தீர்மானித்து நான் டெல்லிக்குப் புறப்பட்டுக் கிளம்பிய நேரத்தில் உடல் நலம் இல்லாத காரணத்தினால் அந்தக் கூட்டத்தில் மைசூர் மாநில முதல் அமைச்சர் கலந்துகொள்ளப் போவதில்லை, டெல்லியிலேயே இருந்த மைசூர் மாநில சட்ட அமைச்சர்தான் கலந்துகொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நம்முடைய நிதி அமைச்சர் அவர்களும், பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களும் கலந்து கொண்டு அங்கே பேசிய நேரத்தில் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மைசூர் மாநிலம் அடிப்படையிலேயே மதிக்கவில்லை. அதை மதித்து நடக்கத் தயாராய் இல்லை என்கிற கருத்தினை நிதி அமைச்சர் அவர்களும், பொதுப் பணித்துறை அமைச்சர் அவர்களும் நம்மிடத்தில் எடுத்துக் கூறினார்கள். அதற்குப் பிறகுதான்