உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

கொள்கையை

41

உடையவனாக

நான் மைசூர் எதிர்ப்புக் கொள்கையை உடையவனாக அவர்கள் கற்பனை செய்துகொண்டு செய்தியை வெளியிட் டிருந்தாலும் நான் அதைப்பற்றிக் கவலைப்பட்டிருக்கமாட்டேன். நான் மைசூர் எதிர்ப்புக் கொள்கையை இருக்கிறேன் என்று அவர்கள் சுட்டிக்காட்டிய குற்றச்சாட்டை இங்குள்ள பத்திரிகைக்காரர்கள் ஏற்றுக்கொண்டு அந்தக் கருத்தினை ஏற்றுக்கொண்டு கருணாநிதியின் மைசூர் எதிர்ப்புக் கொள்கையை எதிர்த்து அவனுடைய கொடும்பாவி அங்கே கொளுத்தப்பட்டது என்று போடும்போது நான் வருத்தப் படுகிறேன்.

கட்சி மாச்சர்யங்களை மறந்துவிட்டு எல்லாக் கட்சிகளும் இதிலே ஒருமித்த கோரிக்கையினை எழுப்பவேண்டுமென்று 1968-லே இருந்து பேசப்பட்டு வருகின்றது. அதன்படி எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசுவதும், பிறகு பேச்சு வார்த்தைகள் நடத்துவதும், நடுவர் தீர்ப்புக்கு விடவேண்டுமென்று வேண்டுகோள் விடுத்து 18 மாதங்கள் கழிவதும், பிறகு மீண்டும் அனைத்துக் கட்சித் தலைவர்களைக் கூட்டுவதும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊர்வலமாகப் போவதும், சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டுவிட்டு அதை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு அதன் பிறகும் எந்தவித முயற்சியும் எடுக்காமலிருந்தால் என்ன செய்வது? அதற்கு ஒரு கால கட்டம் வேண்டாமா? என்றெல்லாம் இங்கு பேசிய எதிர்க் கட்சித் தலைவர்களும் மற்ற உறுப்பினர்களும் எடுத்துச் சொன்னார்கள்.

இன்றைய தினம் இங்கே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றது. மேலவையிலும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட இருக்கின்றது. இந்தத் தீர்மானத்தின்மீது மேலவையிலும் பேரவையிலும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர்களும், அனைத்துக்கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் பேசிய பேச்சுக்களின் சுருக்கங்களையும், நான் ஆற்றிய உரையின் சுருக்கங்களையும், அனைத்தையும் இந்தத் தீர்மானத்தையும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அவர்கள் இந்த மாதம் 15 நாட்களுக்குள்ளாகப் பதில் அனுப்பாவிட்டால் அதற்குப் பிறகு