உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

1943-லிருந்து

இதுவரையிலும்

43

பல

மைசூரின் அறிக்கைகளில் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அப்போது குடகு மாநிலத்திலே லட்சுமண தீர்த்தா அணை கட்டப்படும்போது அப்போது மைசூர் மாநிலத்தில் அந்த அணைக்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டது, நீங்களும் சேர்ந்து குடகிலே அமைக்கப் போகிற லட்சுமண தீர்த்தா அணைக்கட்டுக்கு எதிராகக் குரல் எழுப்புங்கள் என்று மைசூர் அரசாங்கம் கேட்டது. இப்போது மைசூரும் குடகும் ஒன்றாகப் போனதும் தமிழ்நாட்டுக்குப் பாதகமாக ஹாரங்கி அணைக்கட்டை கட்டிக் கொண்டிருக் கிறார்கள். ஹேமாவதி திட்டத்திற்கு 1924-ல் ஒரு அறிக்கைத் தயாரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டதென்று சொன்னார்கள். 1924-ல் மைசூர் அன்று தயாரித்த ஹேமாவதி பற்றிய அறிக்கையில் நமக்குச் சாதகமான பல விஷயங்கள் இருக்கின்றன. நடுவர் தீர்ப்பு என்றால் ஏன் பயப்படுகிறார்கள் என்று திரு. ஹாண்டே அவர்கள் கேட்டார்கள். இதுதான் காரணம். அதிலே என்ன இருக்கிறது என்றால், அவர்கள் ஹேமாவதி அணையைக் கட்டினால்,

'It is not possible to utilise the entire as the Hemavathi river is a scheduled river governed by the Cauvery Agreement of 1924 between Mysore and Madras, என்று அந்த அறிக்கையிலே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மாத்திரமல்ல; இன்னும் ஒரு முக்கியமான விஷயம்

'The project does not affect utilisation or inter-State interests. The Project is designed keeping in view 1924 agreement of Madras and Mysore Governments. The Project comes under the purview of 1924 agreement' என்று இருக்கிறது. ஹேமாவதி அணையைப்பற்றி 1924-ம் ஆண்டு தயாரித்து ஹேமாவதி ரிசர்வாயர் பிராஜக்ட் என்ற இந்தப் புத்தகம் மைசூர் அரசால் அச்சடிக்கப்பட்ட புத்தகம். இதிலே 1924-ம் ஆண்டு ஒப்பந்தப்படிதான் ஹேமாவதி அணை கட்டப்படும், கட்டப்பட வேண்டும், தமிழ்நாட்டுக்குத் தரப்பட வேண்டிய லிமிடேஷன் ப்ளோ ரூல்ஸ் அண்டு ரெகுலேஷன்ஸ் இவ்வளவுக்கு பாதிக்காமல் அணை கட்டப்பட வேண்டும் என்கிற உறுதி அளிக்கப் பட்டிருக்கிற புத்தகம் ஆகும். இது மைசூர் அரசினிடமிருந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகும்.