உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

காவிரிப் பிரச்சினை மீது

நானும், நம் அமைச்சர் பெருமக்களும், கேரளத்து முதல்வரும், மைசூர் முதல்வரும் மத்திய அமைச்சர் திரு.கே.எல்.ராவ் அவர்களோடு பேசுகிற நேரத்தில் எல்லாம் எல்லாவற்றையும் பேசி விட்டு கடைசியாக வீரேந்திர பட்டீல் அவர்கள் 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றுதான் கூறுவார். நான் சொன்னது இப்போது இருக்கிற ஒப்பந்தத்தின்படி இன்றுள்ள சூழ்நிலைப்படி எங்களுக்கு வரையறுக்கப்பட்ட லிமிட் ஃப்ளோஸ் தந்தாக வேண்டும், அந்த லிமிட் ஃப்ளோஸுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதை நான் வலியுறுத்தி இருக்கிறேன். இந்த மாமன்றத்திலும் சரி, அனைத்துக் கட்சித் தலைவர்கள் இதுபற்றி பேசக் கூடி இருந்த நேரங்களிலும் சரி.

லிமிட் ஃப்ளோஸ் ஏதோ கோட்டை விட்டுவிட்டு வந்தது போல தெரிகிறது என்று திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் சொன்னார்கள். லிமிட் ப்ளோஸில் தவறு ஏற்பட முடியாது. மைசூர் ஒன்றும் ஆப்பிரிக்கா கண்டத்தில் இல்லை. நாமும் வெகுதூரத்தில் இல்லை. இன்றைக்கு கிருஷ்ணராஜசாகரில் உள்ளது போல் நம் பொறியாளரும் இருப்பார். அவர்கள் மாநிலத்தைச் சேர்ந்த பொறியாளரும் இருந்துகொண்டிருப்பார். ஆகவே யாரும் அதிலே பொய் கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. தவறு செய்து விட முடியாது. அந்தக் காரணத்தாலே நமது லிமிட் ப்ளோஸ் அங்கீகரிக்கப்பட்டு அதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று எடுத்துச் சொல்லப்பட்டது. இந்த லிமிட் ப்ளோஸுக்கு எந்த ஊனம் வந்தாலும் இந்த அணைக்கட்டு திட்டங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறோம்.

இங்கே ஆளும் கட்சித் தரப்பிலும் எதிர்க் கட்சித் தரப்பிலும் பேசியவர்கள் தேர்தலுக்காக மைசூர் பிரச்சினையில் மத்திய அரசு காலம் கடத்துகிறது என்று சொன்னார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். உண்மை அல்லாமலும் இருக்கலாம். ஆனால் இதிலே நான் கருதுவது எல்லாம் தேர்தல் நடந்த நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் திரு.கே.டி.கே.தங்கமணி கூறியது போல, மைசூர் மாநிலத்தில் பெங்களூருக்கு வந்து பேசிய இந்திராகாந்தி அவர்கள் மைசூர் தமிழ்நாடு காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விடுவதாக இருக்கிறேன் என்று சொன்ன பிறகுதான் மைசூர்