உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8948

TAM

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

G05657

61

ஐந்தாவது அணைக்கட்டுகளில் வேலை தொடங்குவதற்கு முன்பு தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும்.

ஆறாவதாக புது அணைக்கட்டுகள் காரணமாக தமிழக அரசு தனது பாசனத்திற்கென்று பெற்றுவருகின்ற தண்ணீரின் அளவு (லிமிட் ஃப்ளோ) எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதாகும்.

க்

இந்த ஷரத்துக்களின்படி இன்றைக்கு அங்கே அணைகள் கட்டப்படுகின்றனவா என்பதுதான் நம் முன்னால் இருக்கின்ற மிகப் பெரிய பிரச்சினையாகும். இந்த ஷரத்துக்கள் அனைத்தும் மீறப்படுகின்ற நிலையிலேதான் இன்றைக்கு இந்த அணைகள் கட்டப்படுகின்றன. 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படியும் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தப்படியும் தமிழ் நாட்டின் தமிழ் நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். மைசூர் அணை கட்டுவதை நாம் தடுக்கவில்லை. கட்டப்படுகின்ற அணை எதுவாக இருந்தாலும், அந்த அணையின் காரணமாக தமிழ் நாட்டுக்குத் தரப்பட வேண்டிய தண்ணீரினுடைய வரையறை வரையறை அளவு பாதிக்கப்படக்கூடாது என்பதிலேதான் நாம் கவனம் செலுத்துகின்றோம். சிலபேர் இதிலே தவறான கருத்துக்கொண்டு, மைசூரிலே ரிலே அணையே கட்டக்கூடாது என்று தமிழ் நாடு சொல்கிறதே நியாயமா இது என்று இன்றைக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். வேறு மாநிலத்திலே உள்ள சில விளக்கம் தெரியாத பத்திரிகையாளர்கள்கூட மைசூரிலே காவிரி உற்பத்தியாகிறது, அங்கே அணை கட்டாமல் இருப்பார்களா என்றெல்லாம்கூட தலையங்கம் எழுதியதை நான் பார்த்து உள்ளபடியே வியப்படைகின்றேன். இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பே தண்ணீரை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதனைக் கற்றிருந்த தமிழ்மகன் கரிகால் பெருவளத்தான் இங்கே கல்லணையைக் கட்டி காவிரி டெல்டா பாசனத்திற்கு எப்படி எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று வாய்க்கால்களையெல்லாம் உருவாக்கி வைத்த அந்தக் காலத்தில் மைசூரில் அணைகளைக் கட்டுவதைப்பற்றி எண்ணிடவேகூட தயாராக இல்லை. அந்த ஆரம்ப காலம்கூட இல்லாமல் இருந்ததை நாம் மறந்துவிடக்கூடாது. அதற்காக அவர்கள் அணைகளையே கட்டத் தேவையில்லை, கூடாது என்று மறுக்கவில்லை. இருக்கின்ற