90
காவிரிப் பிரச்சினை மீது
காவிரிப் பிரச்சினையில் நம்முடைய தமிழகத்தில் இருக்கிற அரசியல் கட்சிக்காரர்கள் ஒத்துழைத்தால் மட்டும் போதாது, பத்திரிகைக்காரர்களும் ஒத்துழைக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்வேன். ஏனென்றால், மைசூர்காரர்கள் நம்மைப் பார்த்துச் சீறி எழுந்தால், விளக்கங்கள் தந்தால், அதைப் பெரிய அளவில் வெளியிடுவதற்கு இங்கேயுள்ள பத்திரிகைக்காரர்கள் தயாராக இருக்கிறார்கள். ஏதோ இங்கிருக்கிற அமைச்சர் களையோ, திராவிட முன்னேற்றக் கழகத்தையோ, மற்ற மாநிலங்களில் இருக்கிற அமைச்சர்கள் எள்ளி நகையாடுகிறார்கள் அல்லது குறை கூறுகிறார்கள் என்று இந்த விஷயத்தை பத்திரிகைக்காரர்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்று நான் மிகுந்த தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். இது முன்னேற்றக் கழகத்தினுடைய பிரச்சினையல்ல. தமிழகத்தில் இருக்கிற மக்களுடைய பிரச்சினை. இன்றுகூடக் காலையிலே பார்த்தால் பத்திரிகையிலே "காவிரிப் பிரச்சினை, மைசூர் நிலை விளக்கம்” என்று தினமணிப் பத்திரிகையில் பெரிய அளவில் வருகிறது. நான் அதற்காக வருத்தப்படவில்லை.
திரு. கே. ராஜாராம் : ஒருக்கால் நமக்கு ரோஷம் ஊட்ட வேண்டுமென்றிருக்கலாம்.
-
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இதுமாதிரி செய்திகளைப் பார்க்கும்போது, ரோஷம் வருகிறது. ஆனால், வெளியிலே சொல்ல முடியாத சங்கடம் இருக்கிறது. ஆனால் "இதேபோல நான் விளக்கம் தருவது, “காவேரி நீர் மைசூர் முதலமைச்சருக்கு கருணாநிதியின் ஆட்சேபம்" என்ற அளவிற்கு வருகிறது. எதிரிகள் ரோஷம் ஊட்டினால்தான் ரோஷம் வரவேண்டும். இங்கே இருக்கிற தலைவர்கள் ரோஷம் ஊட்டினால் ரோஷம் வரக்கூடாது என்றால், அந்த ரோஷம் ரொம்ப நாளைக்கு நிற்காது. எதிரி ஊட்டுகிற ரோஷம்தான் நிற்கும். நாம் ஊட்டுகிறது ரோஷம் நிற்காதென்றால் அந்த ரோஷம் உண்மையான ரோஷமாக இருக்காது. இதைச் சொல்வதற்குக் காரணம் ஒரு பத்திரிகையைக் குறை கூறுவதற்காக அல்ல. எல்லாப் பத்திரிகைகளுக்கும் சொல்கிறேன். நான் இந்தப் பத்திரிகையை எடுத்துச்சொல்வதற்குக் காரணம் தரமான பத்திரிகை என்ற வரிசையில் இருக்கிற