உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

காவிரிப் பிரச்சினை மீது

உரை : 9

நாள் : 24.02.1975

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர வர்களே, மிக முக்கியமான காவேரிப் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சி தலைவர்களுடைய கூட்டங்கள் அடிக்கடி கூட்டப்பெற்று. அவர்கள் வழங்கிய அரிய ஆலோசனைகள் அடிப்படையில் தமிழக அரசு கர்நாடக முதல்வருடனும் கேரள முதல்வருடனும் மத்திய அமைச்சருடைய முன்னிலையில் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறது என்பதை இந்த அவையும் நாடும் நன்கு அறியும்.

காவிரிப் பிரச்சினை நம்முடைய தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கு ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் சுட்டிக் காட்டியதைப்போல ஒரு உயிர்ப்பிரச்சினையாகும்.

காவிரி நதி தமிழகத்தில் இல்லாவிட்டால் எந்த அளவுக்கு நம்முடைய மாநிலம் வறண்டு போய்விடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பல ஆண்டு காலமாக நாம் காவிரியினுடைய பயனை அனுபவித்து வருகிறோம். 1924-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் 1974-ம் ஆண்டுடன் முடிவுறுகிறது. அதற்குப் பிறகு காவிரியில் நமக்கு எந்தவிதமான பாத்தியதையும் கிடையாது என்ற தவறான பிரச்சாரம் நாட்டில் நடைபெறுகிறது. அந்த அடிப்படை மிகத் தவறானது என்பதைப் பல நேரங்களில் இந் ந்த அவையிலேகூட நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சரவர்கள் இங்கே எடுத்துக் காட்டியதைப்போல 1924-ம் ஆண்டு ஒப்பந்தம் 1974-ம் ஆண்டில் உபரித் தண்ணீரைப் பொறுத்து புதுப்பிக்கப்பட்ட வேண்டிய ஒன்றே அல்லாமல் 1924-ம் ஆண்டு ஒப்பந்தம் 1974-ல் கிழித்தெறியப்பட்டு, வேறொரு புதிய ஒப்பந்தம் செய்து கொள்வது என்பது பொருளல்ல. 1924-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படை யிலேதான் நாம் இந்தப் பிரச்சினையை அணுகி வருகிறோம்.