பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 39.

கூறி,விளக்கஉரையில்,"பொருளும் காமமும் ஆகாவென்ற தற்கு வேண்டுதல் வேண்டாமையிலான் என்று பெயரிட் டார்.” என்று கூறினார் மணக்குடவர். உரையிற்கூறிய இன்பமும், விசேடவுரையிற் கூறிய பொருளும், காமமும் ஒருவனால் விழையப்படுதலின், வேண்டுதல் என்பதற்கு

இன்பம் எனக்கூறியதாற் குற்றமில்லை. இன்பத்திற்கு

மறுதலை துன்பம் ஆதலானும், துன்பம் ஒருவனால் இயற்கையாகவே வெறுக்கப்படுகின்றதாதலானும், யாவ ரானும் வெறுக்கத் தக்கதேயாயினும், இயல்பாக வெகுளியை வெறுப்பார் யாவரும் இன்மையானும், வேண்டாமை யென்பதற் 'வெகுளி' யெனப்பொருள் கூறியது குற்ற முடைத் தாம் என்க. இது நோக்கியே பரிமேலழகர் "ஒரு பொருளையும் விழைதலும் வெறுத் தலும் இல்லாதவன்” என்று ஒரு பொருளையும் குறிக்காது செல்வராயினர். x

5. "இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு”

இதற்கு இருவர் கூறும் உரையும் ஒன்றேயாம். மணக்

குடவர் உரையில் "......தலைவனது ஆகிய மெய்ப்

பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு' என்று ஒரு தொடர் உள்ளது. அதில் ஆகிய என்ற சொல், ஏடெழுதினோரால் தவறாகச் சேர்க்கப் பட்டிருத்தல் வேண்டும்.

இனி, இக்குறளிற்கு"இருவினையும் சேராத இறைவன்

புகழ்புரிந்தார் மாட்டுப் பொருள் சேரும் (புரியார்

மாட்டு இருள் சேரும்) என்று பொருள் கூறுவாருமுளர். இதனால், இருள்சேர், பொருள் சேர் எனவரும் முதனிலை

யுரிச்சொற்கள் இரண்டும், முற்றாதலும், சேரா என்பது

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாதலும் பெற்றாம். -