பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 65.

பெறும். இந்த முறை மாறினால் மேற்கூறிய துறைகள் யாவும் பாழடையும். ஆகவே, தாங்கள் இலராகவும் இதையே ஆதரிப்பாராயினர்டு

இம்முறையைக் கையாளுவதற்கு முன், மிக்க பொருளைப் பெறுதற்குரியார் யார் என்பதைக் காணு வதில் ஐயம் நிகழ்கின்றது. அவ்வாறே நாம் ஒருவரை மேற்கொண்டு அவர் பால் நாட்டை ஒப்புவித்தால், நாம் எதிர்நோக்குவனவற்றை, அவர் செய்து முடிப்பாரா என்பதில் இரண்டாவது ஐயம் நிகழ்கின்றது. அவர்கள் சாதாரண மக்களுடன் கூட்டுறவு பெறாமையால், மக்களின் மனக்குறைகளை அறிய மாட்டாராகலின், அவர்களால் நாட்டிற்குச் சிறுநலனும் வாய்க்கா தென்ப துறுதி. அதற்கு மாறாக, அவர்கள் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்வான் வேண்டி, இன்னும் அதிக நேரம் வேலை செய்து, குறைந்த கூலி பெறவே ஏழை மக்களைக் கட்டாயப்படுத்துவர். விளையாட்டு வேடிக்கைகளுக்கும்,. விருந்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் பொருளின் மிக்க பகுதியைச் செலவிட்டு கல்விக்கும், கலைக்கும் சிறு பகுதி யைச் செலவழிப்பர். இராணுவத்தைப் பற்றிய கவலை யற்றவராகவேனும், அல்லது அதைத் தன்னுடைய பரிவாரமாக மாற்றிக்கொண்டு, உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் உள்ள தமக்குப் பகையாயினாரை அடக்க

வேனும் முயல்வர். தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளவும், தங்கள் குற்றங்களை மறைப்பதற்காகவும் வேண்டி, கல்லூரி, கலாசாலைகளில் கல்வியைக்

குறைப்பர். தங்களை இன்றியமையாதவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக வேண்டி, சாதாரண மக்களை, ஒன்றும் அறியா ஏழைகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கவே. முயல்வர். இறுதியில் அவர்கள் கடமைகள் எல்லாம், பாராளுமன்றம், நகராண்மைக் கழகம், சட்ட நிரூபண மன்றம் முதலியவைகளால் கைக்கொள்ளப் பெற்று.