பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி. . . என்னும் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகம் தோழர் அ. சீனிவாசனின் மார்க்சிய சிந்தனையில் கனிந்த பழம். முடிவுரை நீங்கலாகப் பத்து அத்தியாயங்களில் இந்திய விவ்சாய்த்தின் வளர்ச்சியையும், இன்றைய நெருக்கடியை யும், விவசாயிகளின் அவல நில்ையையும் அவர் விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.

பண்ட்ைத் தமிழகத்தின் நிலவளம், ஆங்கிலேயர் ஆட்சியில் விவசாயத்தின் வீழ்ச்சி, விவசாயிகளின் உரிமைப் போராட் டங்கள், காங்கிரஸ் நிலச் சீர்திருத்தங்கள், பசுமைப் புரட்சி யின் விளைவுகள் கிராமிப்புறங்களில் வர்க்கக் கட்டமைப்பு மாற்றங்கள் ஆகிய அத்தியாயங்கள் சிந்தனையைத் துாண்டு கின்றன.

விவசாயிகள் இயக்கமும் புதிய கடமைகளும் என்னும் கடைசி அத் தியாயம் விவசாய இயக்கத்தின் ஊழியர்களுக்கு வழி காட்டுகிறது.

I

இந்த நூல் கல்லூரி மாணவர்களுக்குக் கருத்துச் சுரங்கம்:

விவசாய இயக்க ஊழியர்களுக்கு இன்றியமையாத கையேடு, ---

பேராசிரியர் நா. தர்மராஜன்