பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

வறுமையின் ஆழமும் அதிகரிக்கும் என்று காரல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்:

செல்வக் குவியல்

வறுமையின் ஆழம்.

இது முதலாளித்துவ உற்பத்தி முறையின் விதிமுறையாகும். சமுதாயம் தனது உழைப்பு சக்தி மூலம் உற்பத்தி செய்த செல்வங்களையெல்லாம் முதலாளித்துவம் அபகரித்துக் கொள்கிறது. அதனால் சமுதாயத்தின், குறிப்பாக சமுதா யத்தில் உள்ள உழைக்கும் மக்களின் வறுமை அதிகரிக்கிறது. எனவே முதலாளித்துவ முறையில் வளர்ந்துள்ள உற்பத்தி சக்திகளுக்கும் முதலாளித்துவ முறையில் அமைந் துள்ள-வளர்ந்துள்ள உற்பத்தி உறவுகளுக்கும் கடுமை யான மோதல் ஏற்படத் தொடங்கியிருக்கிறது.

அந்த மோதல்கள் முதலாளித்துவ நெருக்கடியைத் தீவிரப் படுத்திவருகிறது.

முதலாளித்துவப்பாதையின் காரணமாக இந்தியப்பொருளா தார வளர்ச்சியின் ஒரு பகுதியாக உள்ள இந்திய விவசாய வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நெருக்கடியில்

சிக்கியிருக்கிறது.

பசுமைப்புரட்சி நடவடிக்கைகள் காரணமாக முதலில் விவசாய உற்பத்தி பெருகிற்று. ஆனால் அந்த உற்பத்திப் பெருக்கத்தின் பலனில் மிகப்பெரும் பகுதி இந்திய முதலாளி களுக்குதான் சேர்ந்திருக்கிறது. விவசாயிகளைப் பொறுத்த வரை - ஏழை விவசாயிகள் சிறு விவசாயிகள் நடுத்தர விவசாயிகள் மட்டுமல்லாமல் வசதியான விவசாயிகளும் கூட-கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். விவசாயிகளுக்கு பசுமைப் புரட்சியினால் கிடைத்துள்ள பலன் கட்ன் சுமையே யாகும். இன்றைய கடன்சுமை விவசாயிகளால் தாங்க மு. டி. ய த அளவு உயர்ந்திருக்கிறது. எனவே நமது விவசாயத் துறை யின் அடிப்படையாக உள்ள உழைப்பு சக்தி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு நெருக்கடிக் குள்ளாகியிருக்கிறது.

விவசாயிகள் ஏழ்மையாகி வருகிறார்கள் என்பது மட்டு மல்ல பெரும் அளவில் கடனாளிகளாகி வருகிறார்கள். இந்தக் கடன் சுமை தீர்க்கப்பட்டாலன்றி, விவசாயத்

துறையில் உள்ள உற்பத்தி சக்தியை விடுவிக்க முடியாது.

கிராமப்புற உழைப்பு சக்திகளுக்கு பழைய நிலப்பரபுத்துவ விலங்குகள் நீக்கப்பட்டு இப்போதுபுதிய நவீ இ முதலாளித்துவ விலங்குகள்-கடன் விலங்குகள் மாட்டப் பட்டிருக்கின்றன.