பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 நல்லதொரு முடிவிற்கு வரவேண்டும். ஒன்று, கிராம நூலகங்களுக்கு வாங்க வேண்டிய நூல்கள் எத்தகையனவாக இருக்கவேண்டும் என்பது பற்றி ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வருதல் ஆகும். மற்ருென்று, கிராம நூலகங்களை மக்களுக்குப் பயனுள்ளவையாக ஆக்கும் பணியில் ஈடுபட க்கூடிய ஆற்றலும், அறிவும். அனுபவமும் உடைய, அதாவது கக்காரை நூலகர்களாக அந் நூலகங்களுக்கு நியமிப்பது பற்றி ஒரு முடிவினை எடுத்தல் ஆகும். அ கிராம நாலகச் செல்வங்கள் -- கிராம மக்களில் பெரும்பாலோர் கல்வி அறிவில்லாதவர்களாக விளங்குகின்றனர் என்பதை நாம் முன்னர்க் கண்டோம். வனவே அவர்களுக்காகத் திறக்கப்படும் கிராம நூலகங்களில் எளிய நடை யில் எழுதப் பெற்றதும் விளக்கப் படங்களுடன் கூடியதும், தடித்த எழுத்துக்களில் அச்சிடப் பெற்றதும் ஆகிய நூல்களே முதலி ம் பெறுதல் வேண்டும். பட விளக்கங்கள், அவர்களது கண்ணையும், கருத்தையும் ஈர்ப்பனவாக இருத்தல் வேண்டும். நூலில் அச்சிடப் பெற்றிருக்கும் எழுத்துக்கள் பெரியவையாக, அதாவது கடித்தவையாக விளங்கின், அவர்கள் சிரமம் எதுவும் இன்றி எளிதாக நா?லப்படிக்க இயலும். அடுத்து அவர்களுக்கு விருப்பமான பொருள்கள். அவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பொருள்கள், அவர்களது வாழ்க்கை வளத்திற்கு, நல்வாழ்விற்கு வழிகாட்டும் பொருள்கள் ஆகியவை பற்றிய நல்ல நூல்களைச் சேகரிப்பதில் பொம நூலகங்களை அமைப்பவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அத்தகைய நூல்களைத்தான் அவர்கள் ஆர்வத்துடன் படிப்பர் ; மேலும் அந் நூல்கள் தாம் அவர்களது படிக்கும் ஆர்வத்கினைத் துண்டிக் கொண்டே இருக்கும். செய்திப் பலகை கிராம மக்களுக்கு அன்ருடச் செய்திகளை அறிவதில், நாட்டு நடப்புகளைப் புரிந்து கொள்வதில், உலகத்தில் நடப்பவற்றைத் தெரிந்து கொள்வதில் விருப்பம் இருக்கலாம். அத்தகையவர்களுக்கும் வஃடைய மக்களுக்கும் செய்திகளை அறிவிக்கும் செய்திப் பலகையினை ஒவ்வொரு நூலகமும் கொண்டிருக்க வேண்டும். முக்கிய செய்தி. கள அன்ருடம் நல்ல, நல்ல தாளில் கண்ணைக் கவரும் வண்ணம் எழுதி, அதனை மக்கள் கண்களில் படும்படி செய்தி அறிவுப்புப் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். காட்சிப் படங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் திட்டப் பெறுகின்ற