பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 அல்லது தனித்தாள்களில் (Loose Sheets) எழுதி தொகுக்கப்பட்ட தாகவோ (File) இருக்கலாம். ஒவ்வொரு பெருந்தலைப்புக்கும் (Main Subject) தனித்தனித்தாள் இருத்தல் வேண்டும். இத்தாள்களை, வாசகர்கள் எளிதாகப் பார்க்கும் வகையில் அறிவுப்புப் பலகையில் (Bulletin Board) பார்வையாக வைத்திருக்கலாம். நூலக நூற்பட்டியில் நூலைப்பற்றிய கீழ்க்காணும் விவரங்கள் அடங்கிருத்தல் வேண்டும் (1) வகைப் படுத்திய எண் (2) ஆசிரியர் பெயர் (3) நூலின் தலைப்பு (4) நூல் வரிசை எண் இவ்வாறு நூல்கள், நூலடங்களில் பதிவாகி, பொருள்வாரி பாக வகைப்படுத்தி, நூலக நூற்பட்டியில் பதிவாகிய பின், அவை வாசகர்களின் பயனுக்கு ஆயத்தமாகி விடுகின்றன. 2. தரலக விதிகன் கிராம நூலகத்திற்குச் சில விதிகளும் ஒழுங்கு முறைகளும் அவசியம். இவற்றைக் கிராம நூலகர் வகுக்க வேண்டும். இவ். விதிமுறைகள் பண்புள்ள மொழியில் அமைந்திருத்தல் வேண்டும் இந்த விதிகள் மிகக் குறைந்த அளவிலும், அதே சமயத்தில் நூலகத்தைப் பயன்படுத்துவதற்குத் தேவையான வி ை ங் க ளு ம் விளக்கங்களும் உடையனவாகவும் இருக்க வேண்டும். பின்வரும் - .است - : o, __ ——t - + -- -Doo! —t விதிமுறைகளை முன் மாதிரியாகக் கொள்ளலாம். அந்தந்த ஊரின் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு இவ்விதிகளில் தக்க மாறுதல்களைச் செய்து கொள்ளலாம். 1. நூலகம் காலை, மாலை ......... மணிமுதல் காலை மாலை ........... மணி வரை திறந்திருக்கும். . ... ...... கிழமைகளும், நூலகக் குழுவினர் தீர்மானிக்கும் நாட்களும் விடுமுறை நாட்களாகும். 2. ........... கிராமத்தில் அல்லது.... ... ... ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் அல்லது வேலைபார்க்கும் ஆண், பெண், குழந்தைகள் (எட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள்) அனைவரும் நூலகத்தில் உறுப்பினராகலாம். 3 ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு தடவையில் இரண்டு நூல்கள் கடகைப் பெறலாம்.