பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அந்த ஒப்பந்த விதிகள் தாம் (Articles of Agreement) இந்த ஆட்டத்தை குழப்பம் நேராமல் ஆட் கொண்டு காத்தருளின.

பக்லி (Buckley) என்பவர் இதுபோன்று பல்வேறு இடங்களில் போட்டியிட்ட குழுக்கள் ஏற்றுக்கொண்ட இணக்கமான ஒப்பந்த விதிமுறைகளையெல்லாம் தேடி ஆராய்ந்து தொகுத்து, ஒரு முடிவினைக் கூறியிருக்கிறார். அதாவது, 'அவ்வாறு தோன்றிய ஒப்பந்த விதி முறைக்ள எல்லாம் பந்தயத்திற்காகக் கட்டியிருந்த பணத்தையே அடிப்படையாகக்கொண்டு அமைந்திருந்தனவே தவிர, ஆட்டம் சீராக அமையவேண்டும், சிறப்பாக மெருகேற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாமல், எப்பொழுதாவது அபூர்வமாகவே (விதி முறைகளில்) குறிப்பிட்டிருந்தன.'

அதிலும், எந்த இடத்தில் ஆட்டம் நடைபெறுகின்றதோ, அந்த இடத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்த விதிமுறைகளையும் ஏற்று, ஒரு மாதிரியாக சமாதானப்படுத்துவது போன்றே மாற்றங்களை உண்டுபண்ணி, பழமை விதியினையும் புதிய முறையையும் ஒருமைப்படுத்தும் தன்மையிலேயே விதிகளை அமைத்துக்கொண்டிருந்தனர்.

அவ்வாறு விதிகள் தோன்றியதன் காரணமாகவே, பிற்காலத்தில் ஆட்டத்திற்குரிய செம்மையான விதிகளை உண்டுபண்ணக் கூடிய வழியினை உருவாக்கிடும் தன்மையையும் எளிதாக ஏற்படுத்தின என்றே ஆராய்ச்சி அறிஞர்கள் கருதுகின்றார்கள்.

கிரிக்கெட் ஆட்டம் பற்றி பின்னர் பல நூல்கள் வெளிவந்தன. அவற்றில் எட்டுக்கும் மேற்பட்ட கிரிக்கெட் நுல்களையும் அந்த ஆசிரியர்களின் கருத்துக் குழப்பங்களையும் தடுமாற்றங்களையும் உணர்ந்து ஆராய்ந்த