பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


தற்கு முன்னர், இரு குழுத் தலைவர்களும் ஏற்றுக் கொண்டு முடிவு செய்வதற்கிணங்கவே, புதிய பந்தெறி தவணைகள் நிர்ணயம் செய்யப்படும்.

8. பந்தாடும் மட்டையின் (Bat) நீள அகலம் எடை எவ்வளவு?

ஒரு பந்தடி மட்டையின் அகலப் பரப்பானது, எந்த நிலையிலும் 4¼ அங்குலத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். அதனுடைய மொத்த நீளப் பகுதியானது 28 அங்குலத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

மட்டையின் எடையானது, ஆடுவோரின் அபிப்பிராயத்தைப் பொறுத்ததாகும். பொதுவாக, மட்டையின் எடையானது 2 பவுண்டு 2 அவுன்சிலிருந்து 2 பவுண்டு 10 அவுன்சு வரை இருப்பது போல் செய்யப்படுகிறது. அவரவருக்குத் தேவையான, பொருத்தமான எடையுள்ளதாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அது தனிப்பட்ட ஒவ்வொருவரின் வசதியைப் பொறுத்ததாகும்.

9. விக்கெட் - {Wicket) என்றால் என்ன? அதன் அமைப்பை விவரி!

விக்கெட் என்பது மூன்று குறிக்கம்புகளால் (Stumps) ஊன்றி வைக்கப்பட்டு உருவாகியிருக்கும் ஒரு அமைப்பாகும்.

ஓவ்வொரு குறிக்கம்பும் ஒன்றைப் போல ஒன்று அளவிலும் கனத்திலும் அமைப்பிலும் ஒற்றுமையுடையதாக செய்யப்பட்டிருக்கிறது.