பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தில் கேள்விபதில்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

என்றாலும், தரையைப் பந்து தொட்டதா, எல்லைக்கு வெளியே சென்றதா என்பதையெல்லாம் சூழ்நிலையை நுணுகி ஆராய்ந்த பிறகே, நடுவர் தனது தீர்ப்பினை அளிப்பார்.

பந்து மட்டையிலிருந்து அடிபட்டு நேராக மேலே உயர்ந்து சென்றுவரும் போது பிடித்தலைத் தான், பிடி கொடுத்தல் என்கிறோம்.

68. பந்தை இருமுறை ஆடுதல் (Hit The Ball Twice) என்பது எப்படி என்று விளக்குக?

பந்தடி ஆட்டக்காரர், பந்தெறியால் வருகிற பந்தை அடித்தாடி, அல்லது தன்னுடைய உடல் அல்லது உடையில் பட்டுவிட்ட பந்தை மீண்டும் வேண்டுமென்றே அடித்தாடினால், அதைத்தான் இருமுறை ஆடுதல் என்று கூறுகின்றார்கள்

பந்தெறி மூலமாக, முதலில் அவர் பந்தை அடித்து ஆடி விடுகிறார். ஆனால் அந்தப் பந்து, அவரருகிலேயே கிடப்பதால், அதை அடித்தாட வேண்டும், எட்டிப் போகுமாறு அதிக தூரத்திற்கு அனுப்பி விட வேண்டும் என்று வேண்டுமென்றே, மீண்டும் அடிப்பதானது இரண்டாவது முறையாக பந்தை அடித்தாடுகிறார் என்றே இதற்கு அர்த்தமாகும்.

இதற்குரிய தண்டனை, அவர் ஆட்டமிழப்பதுதான்.

69. இரண்டாவது முறை பந்தைத் தொடவே கூடாதா?

தான் அடித்தாடிய பந்தை இரண்டாவது முறை தொடலாம். அதற்கென்று உள்ள சந்தர்ப்பங்களும் உண்டு.