பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கால்டுவெல் ஐயர்

25


கால்டுவெல். அவர் பார்த்த காலத்தில் காயலினின்றும் கடல் இரண்டு மைல் விலகி நின்றது. செம்படவரும் லெப்பையரும் அச்சிற்றூரில் வசித்து வந்தார்கள்.

காயல் துறைமுகம் துர்ந்த பின்னர் தூத்துக்குடி பாண்டி நாட்டுத் துறைமுகமாயிற்று. பதினைந்தாவது நூற்றாண்டு முதல், தமிழ் நாட்டில் வியாபாரம் செய்யத் தொடங்கிய போர்ச்சுகீசியர் முதலிய மேலே நாட்டார் தூத்துக்குடியைச் சிறந்த துறைமுகமாகத் திருத்தினர்கள். ஆகவே, பாண்டி நாட்டின் முற்காலத் துறைமுகம் கொற்கை : இடைக்காலத் துறைமுகம் காயல்; தற்காலத் துறைமுகம் தூத்துக்குடி. இவற்றை எல்லாம் நன்கு ஆராய்ந்து நமக்கு அறிவித்தவர் கால்டுவெல் ஐயரே.

இன்னும் முற்காலத்தில் சேர நாட்டுக் கரையிலும், சோழ நாட்டுக் கரையிலும் அமைந்திருந்த சிறந்த துறைமுகங்களைப் பிற நாட்டார் எழுதி வைத்த சரித்திரக் குறிப்புக்களிலிருந்து கண்டறிந்தார் கால்டுவெல் ஐயர். தென்னாட்டு முத்து பிற நாடுகளுக்குச் சென்றது போலவே உணவுப் பொருளாகிய அரிசியும் மரக்கலமேறிச் சென்றது. தமிழ் நாட்டில் வளமார்ந்த காவிரியாறு சென்ற இடமெல்லாம் செந்நெல் விளைத்தது. காவிரி நாடு எனப்படும் சோழ நாடே அன்றும் தமிழகத்தின் களஞ்சியமாய் விளங்கிற்று; இன்றும் களஞ்சியமாய் விளங்குகின்றது. காவிரியாறு கடலோடு கலக்குமிடத்தில் சிறந்த துறைமுகம் ஒன்று இருந்தது. காவிரிப்பூம்பட்டினம் என்றும்