பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

115


ஈதிமசுக்குக் கொடுக்க வேண்டிய ஈட்டுத்தொகையைத்தான் அவனால் கொடுக்க முடியவில்லை.

எதிரி ஈதிமசை தனியே அழைத்தான். அவனிடம் ஒரு ரகசிய உடன்படிக்கையை செய்து கொண்டான். தன்னிடம் பணம் இல்லை என்றதால், தந்திரமான முறையிலே தான் அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது.

அதாவது, கி.மு. 476ம் ஆண்டு நடக்கப்போகின்ற குத்துச் சண்டைப் போட்டியில், தியாஜனிஸ் கலந்து கொள்ளாமல் விட்டுக் கொடுத்துவிடவேண்டியது. அவ்வாறு வெற்றியை பெற்றுத்தரும் தியாஜனிசுக்கு அவன் கொடுக்க வேண்டிய அபராதத் தொகையை வாங்கிக் கொண்டதாக சரிகட்டிக் கொள்வது என்பதுதான் அந்த ரகசிய உடன்படிக்கையாகும்.

ஒலிம்பிக் வெற்றியில் கொண்டிருந்த பேராசையின் காரணமாக, ஈதிமசும் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டான். இது தெரிந்துபோனதால், குத்துச்சண்டையில் பங்கு பெறவே கூடாது என்று தியாஜனிஸ் விலக்கப்பட்டு விட்டான். மீண்டும், அவனால் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கு பெற முடியாமலே போயிற்று.

பணத்திற்காக எதையும் செய்கின்ற பழக்கம், புனிதமான ஒலிம்பிக் பந்தயங்களிலும் பின்பற்றப்பட்டது. தான் பணம் கொடுத்து, லஞ்சம்போல தனது போட்டிப் பாதையை ராஜபாட்டையாக்கிக் கொண்ட ஈதிமசும், தொடர்ந்து நடைபெற்ற கி.மு. 476, கி.மு. 472ம் ஆண்டுகளின் பந்தயங்களில் எளிதாக குத்துச் சண்டையில் வெற்றிபெற்று புகழடைந்தான். ஆனால், பங்கராசியப் போட்டியில் மட்டும் வெற்றி பெற்றான் தியாஜனிஸ்

வெற்றி வீரன் தியாஜனிசின் வீரத்தையும் பலத்தையும் பலரும் பாராட்டினர். அவனை கௌரவிக்கும் வகையில்,