பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்

127


தப்பி ஓடுவதற்காகத் திமிறி கொழுத்த காளையினை இவன் விட்டுவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டானாம். முழு முயற்சியுடன், முண்டியடித்துக் கொண்டு, அவன் கையிலிருந்து காளைதப்பித்து ஓடிவிட்டது என்று பார்த்தால், பொலிடாமசின் கைகளில் காளைமாட்டின் குளம்புகள் இருந்தனவாம். இந்த நிகழ்ச்சியையும் அவன் அரிய வலிமையை விளக்குவதற்காகக் குறித்திருக்கின்றனர்.

பந்தயக்குதிரைகள் போலபாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய சாரட்டு வண்டி ஒன்று, வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, அதன் பின்புறம் இவன் சென்று, ஒரு கையால் வண்டியைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டான் என்பதாக மற்றொரு நிகழ்ச்சி.

இவன் வலிமை உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரவியது. பொலிடாமசின் பலத்தைப் பற்றி பலபடக் கேள்விப்பட்ட பாரசீகத்து மன்னன், தன் அரசவைக்கு அவனை வரவழைத்தான். தன் மெய்க்காப்பாளர்கள் மூவரை அவனுக்கு அறிமுகப்படுத்தி, இவர்களை வென்று அவனது வலிமையை நிரூபிக்குமாறு கேட்டுக் கொண்டான். அதை சவாலாகவே ஏற்று, சக்திமிகந்த அந்த மூன்று வீரர்களையும் வென்று தன் வலிமையை நிரூபித்தான் என்பதாக மற்றொரு நிகழ்ச்சி.

இவ்வாறு சக்தியும் திறமையும் மிக்க பொலிடாமஸ், கி.மு. 404ல் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்திற்கு வந்தான். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகின்ற போட்டியில், மீண்டும் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்ளச் சென்றான். ஆனைக்கும் அடிசறுக்கும் என்பார்களே அதுபோல் அவன் நிலையாயிற்று.

அவனும் சாதாரண மனிதன்போல் நாளுக்கு நாள் நலிந்து வருகிறான் என்பது போல நிலை ஆயிற்று, புரோமர்கஸ் எனும்