பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
7. மாதர்கள் நிலை

ஏதென்ஸ் நகர மக்கள் பல்வேறு தொழிலில் ஈடுபட்டிருந்தனர் என்றாலும் அவர்கள்க்குப் போதுமான ஓய்வு நேரங்கள் இருந்தன. அந்நேரங்களைக் கேளிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் கழித்தனர் உழவர்கட்கு ஆண்டு முழுவதும் வேலை இராது என்பதை எவரும் அறிவர். அவர்கள் தமக்கு நிலம் பணி இல்லாதபோது, வேறு பணியில் ஈடுபட்டு இன்புற்றிருந்தனர். மாலுமிகள் மாரிக்காலத்தில் மாக்கடல் வழியே மரக்கலங்களைச் செலுத்தமாட்டார்கள். அக்காலங்களை இன்பமாக ஓய்வு எடுத்துக்கொண்டு கழித்து வந்தனர். ஏனெனில் கடல் பெரிதும் மாரிக் காலத்தில் கொந்தளிப்புடன் துலங்கும். கைத்தொழிலாளிகளும் கடைக்காரர்களும் பிறர்க்குக் கைகட்டி விடைகூறும் நிலையினர் அல்லர். ஆதலின், அவர்களின் இன்பப் பொழுது போக்கைப் பற்றி இயம்ப வேண்டா. இந் நிலையில் மாதர்களின் நிலையைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.

பொதுவாகக் கூறுமிடத்து ஏதென்ஸ் நகர் ஆண் மக்கள் வீட்டைப்பற்றிய பொறுப்பே அறியாதவர் என்னலாம். ஏனெனில் ஏதென்ஸ் நகர மாதரிகள் மனைவி என்னும் சொல்லுக்குரிய பொருட் பொருத்தமுற வீட்டு வேலைகளைத் தாமே கவனித்து வந்தனர். மனைக்கு விளக்கம் மடவாள்தானே ! செல்வர்கள் இல்லங்களில் அடிமை ஆட்கள் ஆவணி ஆற்றிவந்தனர்.

மாதர்கள் பணி

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நக மாதர்கள், ஊழியம் செய்து ஓய்வு பெற்றவர் போல்