பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

யில் பகைகொண்டு நாடுகள் போர் தொடுத்திருந்தாலும் அதனை நிறுத்தியே ஆகவேண்டும். விளேயாட்டுக்கள் முடிந்ததும் போரைத் தொடங்க வேண்டும். இதனால் விளையாட்டு இங்கு முதன்மை பெற்றிருந்தது என்பது புலனாகிறது.

விளையாட்டுத் தொடங்கப்பெறும் முதல் நாள் ஸீயஸ் (Zeus) தெய்வத்திற்குப் பலிகொடுத்த பிறகே தொடங்கப் பெறும். இரண்டாவது நாள் சிறு சிறு விளையாட்டுக்கள் நடைபெறும். மூன்றாவது நாள் உணர்ச்சி ததும்பக்கூடிய விளையாட்டுக்களான ஒட்டப் பந்தயம், குத்தும் மல்லும் கலந்த பந்தயங்கள் நடைபெறும். நான்காவது நாளில் தீப்பந்தாட்டம், மற்போர், நீளத்தாண்டுதல், நிறைப்பந்தெறிதல் முதலான விளையாட்டுக்கள் நடைபெறும். இந்தப் பந்தயங்களில் யார் மிகுதியாக ஈடுபட்டு மிகுந்த எண்ணிக்கைகளைப் பெறுகிறார்களோ, அவர்களே வெற்றிக் கொண்டவர்கள் என்று முடிவு கூறப்படும். இந்தப் பந்தயத் திருவிழாவின் இறுதி நாள், தேர்ப்பந்தயம், குதிரைப் பந்தயம், நடைப் பந்தயம் ஆகிய இவற்றோடு முடிவுறும். பந்தயங்கள் முடிந்து வெற்றி பெற்றவர்களுக்கு நண்பர்களும் ஏனையவர்களும் தம் பாராட்டுக்கு அறிகுறியாக மலர் மாலைகளை அளித்து மகிழ்வார்கள். வெற்றிக்கு அறிகுறியாக விலை மதிப்புக்குரிய யாதொரு பெரும் பரிசும் அளிக்கப்படவில்லை. வெற்றி பெற்றவர்கள் தம் நகர மக்களால் புகழப்படுகின்ற புகழ்ப் பரிசுகளை மட்டும் என்றும் பெற்றவர் ஆவர். ஆனால், வெற்றியாளர்கட்கு ஒரு நன்மை மட்டும் உண்டு. வெற்றி பெற்றவர் தம் ஆயுள்