பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அனுபல்லவி


தருமபோதனே பெருந் தவவிநோதனே
அவ தாரநீ யென்னில் சேரநான் ஒரு
தகவில்லாதவன் எதும் (ப)

சரணம்


கோரமென்றன் வேலையாள் திமிர் வாத வேதனை
கூறு மீண்டோர் வார்த்தை வினைஞன் குணமே பூரணம்
வேறும் வேண்டுமோ என்றன் வீரர் நூறுபேர்
எந்த வேளையும் வந்து போவரே பிறர்
வியஞ்செய்வேனுமே எவப் (ப)
இல் = வீடு.

 

17
விதைக்கிறவன் உவமை.
நொண்டிச்சிந்து,

கேளீர் உவமையொன்று - முடியக்
கிளக்கும் வரையும் உள்ளக் கிளர்ச்சியுடன்
விதைக்கும்படி யுழவன் -ஒருவன்
விதைகளெடுத்துக்கொண்டு விரைந்து சென்றான்
விதைக்கும் பொழுதுசில--விதைகள்
விழுந்தன புறமான வழியருகே
பறவை பலவந்தே-அவற்றைப்
பட்சித்தன முழுவதும் நட்டமாகவே
கற்பாறை நிலத்து - விதைகள்
கடிதில் முளைத்தன மண்காணாமல்
வெயிலேறின போதோ- அவைகள்
வெந்து கருகினவே வேரின்றி
முள்ளாரிடம் விழுந்த விதையும்
முளைக்கமுள் வளர்ந்ததை நெருக்கினதே
பண்ணார் நன்னிலத்து-விதைகள்
பத்தும் நூறுமாகப் பெரும் பலன் தந்தன
விதைப்போன் மனுஷமகன் - அந்த
விதைகளும் விண்ணரசின் வசனங்களே
நிலமோ மனிதர்மனம் - அதுவும்
நிகழ்தரும் நால்வகை நிலையறிவீர்