பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

முகவுரை.


ஆதியிற்கடவுள் உலகனைத்தையும் படைத்த நோக்கம் ஆன்மாக்களெல்லாம் தம்மைத்துதித்து மகிமைப்படுத்த வேண்டு மென்பதே. வானகத்தில் தேவதூதர்கள் ஓயாமல் தேவனைப் புகழ்ந்து போற்றுகின்றனர். அதுபோல வையகத்திலும் அவரைப் புகழ்ந்து போற்றவேண்டும். ஏனென்றால் மகிமையும் புகழும் அவருக்கே உரியவை. இதையே கர்த்தருடைய ஜெபத்தின் முதல் வாக்கியமும் இறுதி வாக்கியமும் வற்புறுத்தும்.

தேவனைப் புகழ்ந்து போற்றுவதற்குச் செய்யுளுங் கீர்த்தனமுஞ் சிறந்த கருவிகள். இவை இரண்டிற்கும் பொதுவாயிருப்பன சொல், பொருள், இசையென மூன்று. இவற்றுள் சொல்லைவிடப் பொருளும் இசையும் சிறந்தவை. அப்பொருளிசையுள்ளும், பொருள் புலவரையும் பக்தரையு மட்டும் உருக்கும்; இசையோ செவிப்புலனுள்ள இருதிணையுயிர்களெல்லா வற்றையு முருக்கும். இம்மூன்றும் சிறந்திருப்பின் இணையற்ற இன்பமும் பத்திச்சுவையு முண்டாகும். இறைவனோடு இரண்டறக் கலந்து அவரை இன்னிசையாய்ப் பாடித் துதிப்பதையே பேரின்பமென்றும், வீடென்றும் பெரியோர் கூறுவர். இத்தகைய பேரின்பத்தை இறைவனடியார்கள் இவ்வுலகத்திலேயே ஜீவன் முத்தரா யனுபவிக்கின்றனர். இறைவனை யடைந்து பெறும் பாவ விடுதலையே வீடெனப்படுவது. இதையறியாத உலக நேசரோ வீடென்பது மறுமையிலோர் தனியிடமே யெனக்கருதி மேன்மேலும் அந்தகாரத்தில் மூழ்கா நிற்பர். இறைவனில்லாத காலமும் இடமும் யாண்டுமின்மையால், உண்மையடியார்கள் மலை போன்ற துன்பம் வரினும் மரண இருளின் பள்ளத்தாக்கிலிருப்பினும் பொல்லாப்புக் கஞ்சுவதில்லை. பவுலுஞ் சீலாவும் சிறைச்சாலையிலிருந்து தேவனைப்பாடித் துதித்தார்களே!

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வோர் இசையிருப்பதால், அடியார்கள் ஆங்காங்கு வெவ்வேறு மொழியில் வெவ்வேரிசையாய்ப் பாடித்தேவனைத் துதித்திருக்கின்றனர். கிறிஸ்துமார்க்க ஒளி தமிழ்நாட்டிற்கு மேனாட்டாராற் கொண்டுவரப்பட்டமை-