பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

35

முப்பதின்மேல் மூன்றும் அரையும்—பருவம்வரச் சிலுவையதில்
மூப்பராசாரியர் அறையும்—ஒரு
                முள்ளின் மாமுடி யெள்ளவே பெருங்
                கள்ளனாயினர் வள்ள லேசுவும்
முன்பு யூதர் கொண்ட மதமே—முடியும் வரை ஒரு பிடியாய்
        முண்டு செய்து கண்ட வதமே

பொந்தியுப் பிலாத்து பதியே-புரையரினம்
இரைய மனம்
போலவே மயங்கும் விதியே-யூதர்
புத்திரத்தையே பெற்றதில்லையோ
எத்திறத்தவர் செற்ற தென்னையே
புல்லியர்க்கேயிந்த ஞாலமே - புனிதமுள
இனியகுண
நல்லவர்க்கோ இல்லை காலமே

சிந்துர மிகுந்த காயமே-சிந்தாமணியோ
நந்தாவொளியோ
சேயிடை பரந்து பாயுமே-அதைச்
சிந்தை நொந்து மிகுந்து சிந்தியே
அந்தி சந்தி விழுந்து வந்தியே
சீரை யோடிருந்த வண்ணமே-செந்நீர் பருகிப்
பின்னே முழுகச்
சேரும் வெள்ளைத் தூயவண்ணமே

 

38
'தோடுடைய செவியன்' என்ற மெட்டு..

பாரின்பவப் பலியாய்ப் பர மாசுதன் பாவிகளை மேவி
சோரும் வெயில் கரங்கால்களில் சோரவோர் சோரிமிகுமாரி
கூரும்பல குடையாணிகள் கூடமே கொண்டறைய வன்றே
சோரன் போலச்சிலுவை யறையுண்டதும் சுணங்கனென்னா
லன்றோ

6