பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

 

41
பரமேறுதல்.
நீலகண்ட மகாதேவா, என்ற மெட்டு.
இராகம் - வசந்தா தாளம் - நபகம்

பல்லவி

மேக வாகன மீதி லேறி
மேசையாபர மேவி யேறும்

அனுபல்லவி


தேகமோடுயிர்த் தெழுந்து மேலே
ஆக நாற்பதும் அருமை நாளே (மே)

சரணம்


ஆவலாய்ச் சீடர் அவனி நீட
அணந்து நின்றனர் ஆற்ற வொண்ணுமோ
தேவதூதரும் இவ்வகை ஏசு
திரும்பு மென்றனர் தேற்ற வெண்ணியே (மே)

 

42
கிறிஸ்து பிதாவின் வலதுபாரிசத்திலிருந்து
பாவிகளுக்காகப் பரிந்து பேசுதல்.

'நன்னுபாலிம்ப' என்ற மெட்டு.
பல்லவி
மன்னியுந்தேவ மகிமை எ கொவாவே
மாந்தர் பாவமே

 

அனுபல்லவி


கனிதராமரமே கனலுற வேண்டாம் தொட்டே
இனிதெரு விடுவேன்நான் இனுமொரே ஆண்டுமட்டே (ம)

சரணம்


நிலவுலகேகி நிரப்பொடு நிந்தையாகி
நிலந்தலை சாய்க்கவும் நிற்கவும் நேரமின்றிச்
சிலுவையில் வேதனை சிறந்து பாடுபட்டுச்
சிறுமையுடன் மரித்தே தீர்த்தனென் பாவப்பாரம் (ம)
தொட்டு = தோண்டி, கொத்தி. நிரப்பு = வறுமை.