பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47

திருக்கழிந் திரு தினமுணவின்றித்
திறக்க வங்கொரு தரிசன மொன்றத் (தே)

திரு மக னெனுமொரு தினகர வொளியொடு
மொருமதி மறுபெய ரொடுவர மருவிய (தே)

சரணம்


தேசமெங்கும் புகழுங் கமாலியேல் தரிசியே
ஆசிரியனாக அவன் அடிகள் பரசியே
மாசறு கலைகள் பல மாண்ட சவுல் சசியே
ஏசுமத ஞானமதில் எல்லையில் அசுசியே - உற

எதுவுஞ் செய்யாமல் வேலைவெட்டி-கிறிஸ்
தேசுவடியார்களையே கட்டிப் - பல
இன்னல் செய ஒரு சிறுபட்டி- அதற்
கென்று பின் தமஸ்கு நகரெட்டி-வர

எல்லொளியும் வீசும் இறையொடும் பேசும்
கொள்ளும் விசுவாசம் குறைவறும் நேசம் (தே)
தடித்து = மின்னல். திருக்கு = கண். சசி = சந்திரன்.

 

55
மெய்ம்மறை.
'கோரினவர முசகுமைய' என்ற மெட்டு.
இராமப்பிரிய --- ரூபகம்.

பல்லவி
ஆரணவுரை அமுதவாரி ஆனந்த மாரி
அனுபல்லவி

சாரமான மதுரவேரி சத்யாங்க சத்ப்ரசங்கம் (ஆ)

சரணம்


நரராலாகாதனாதி நம்பனார் வாய் மலர்ந்த ஜோதி
பெருகு பத்துத்தரும நீதி பேதமுறாப் பேராவிதி
பரமபத நெறியை யோதி பாருடன்பொரும் வீரவேதி
கரவாத கனகசம்பத்தாதி (ஆ)