பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 103 அவர் சிரித்துகக் கொண்டே கூறுகிறார். "எதிலும் பணம் எதிர்பார்க்கும் உலகம் இது; வழக்கினால் அவர்கள் வாழ்வு வளம்படுத்திக் கொள்ள முடியும் வாய்ப்பு அது; அதனால் தவறில்லை?"

  • « y 3

முடிவு - "அதை நீங்கள் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள்' என்றார். 'நீர் ஏன் வழக்குத் தொடுக்கவில்லை' என்று மருத்துவர் நெகிழ்வோடு கூறினார். அவரிடம் என்ன பதில் கூறுவது? - 'தொடுத்தால் நீங்கள் எனக்கு இழப்பு ஈடு செய்வீர் களா?’’ 'அதற்குத்தான் உங்களைச் சந்திக்கிறேன். உங் களுக்கு நான் தவறு செய்துவிட்டேன். அதனால் இழப்புக்கு ஈடு கடமைப்பட்டிருக்கிறேன். வழக்குத் தொடுத்தவர்க்கு ஈடு செய்தேன். தொடுக்காத உமக்கும் உரிய தொகை தருகிறேன். அது என் கடமை' என்கிறார். அவர் கையெழுத்திட்டுத் தொகை எண் எழுதிக் காசோலை யை நீட்டினார். 'தவறு செய்தது நான்; அதற்கு உரிய தண்டனை இது; தவறுதல் இயல்பு. இதற்கு யாரும் பொறுப்பு இல்லை; பிழை நம்மை மீறி நடப்பது; இதற்கு உங்களைப் பொறுப்பாக்க விரும்பவில்லை; மன்னிக்கவும்” என்று பதில் தருகிறான். அந்தக் காசோலை மருத்துவர் தர முற்பட்டார். அதனை இவன் வாங்க மறுத்துவிட்டான். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். தம் தொழிலுக்கு மதிப்பு உள்ளது என்ற மனநிறைவோடு அகல்கிறார்.