பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 113 அவனுக்கே அதுக்கு விளக்கம் பெறவில்லை. இதுபோல் நாடகம் முதல்முறை அல்ல; அவ்வப் போது மறு ஒலிபரப்பாகத்தான் இருந்து வருகிறது. அவன் சம்பாதிப்பதை அவன் எண்ணிப் பார்த்தது இல்லை; அவனுக்கு எண்ணத் தெரியாது என்பது அல்ல; எப்படியும் அவள் எண்ணித்தான் எடுப்பாள்; இரட்டிப்பு ஏன்? அதனால்தான் அவன் எண்ணுவது இல்லை. "ஏன்பா எண்ணிப்பாரு அதுதான் நல்லது” என்பார் பணம் பட்டுவாடா செய்யும் காசாளர். - “தேவை இல்லை. அவள் எண்ணிக் கொள்வாள்' என்பான். 'உனக்கு என்று எதுவும் எடுத்குக் கொள்ள மாட்டாயா?” அன்று எப்படியோ ஒரு நோட்டுக் குறைந்து விட்டது. அதற்குக் காரணம் கேட்கப்பட்டது. விசாரணைக் கூண்டில் நிறுத்தப்பட்டான். - . "யாருக்குத் தந்தீர்?" "அதைச் சொல்ல விருப்பம் இல்லை' 'எனக்குத் தெரியாமல் எப்படி நீர் தரலாம்?" 'அது எப்படித் தரலாம்? யோசித்துத்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது”. - - அவளுக்காக அவன் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டி இருந்தது. - எந்த மாதிரி பொய் சொல்லலாம். பாவம்! “என்கூட வேலை செய்யற ஆள் அடுத்த மாசம் தர்ரேன்னு கேட் டார்; கொடுக்க வேண்டி வந்தது” சொல்லிப் பார்த்தான். அடுத்த மாதம் என்ன பதில் சொல்வது? அந்தக் கற்பனை அவனை விட்டு அகல்கிறது. - .