பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 சாப்பாடு என்ன செய்தது 'பிறகு வருத்தப்படமாட்டாயே' 'தராவிட்டால்தான் வருத்தப்படுவேன்' "அவள் என் தாய்; என்னைப் பெற்றவள்; அவளுக்குத்தான் தந்தேன்; இனி தொடர்ந்து தருவேன்' எனறு முடிததான, 20 அறிமுகம் அண்ணாசாலை; அவர்கள் அலமாரியில் அடுக்கடுக் காக நூல்கள் வரிசைப்படுத்தித் தலைப்புகேற்ப வைத்திருந் தார்கள். எல்லாம் ஆங்கிலப் புத்தகங்கள். அகில உலக மாநாடு இந்தப் புத்தகங்களை வைத்து நடத்தினார்கள். அகில இந்திய ஆசிரியர்களுக்கும் இடம் தந்திருக்கிறார்கள். அவர்கள் பரந்த மனப்பான்மை அது. உலக மொழி ஆங்கிலம். அதில் பாரதக் கதைகளை எழுதுகிறார்கள். தமிழில் எழுதினால் அவை விற்பனை ஆவது இல்லை; அதனால் இவர்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். கான்வென்ட் படித்த 'பாரதியார் களுக்கு' எனப் படைக்கப்பட்டவை இவை. 'திரெளபதி துகில் அதற்கு ஒரு படம். கீதை உப தேசம் கிருஷ்ணன் பழைய காலத்துத் தேரில் குதிரையை ஒட்டச் சவுக்கு ஒரு கையில்; சக்கரம் ஒரு கையில்; படம். 'சிலம்பின் கதை அதற்குக் கண்ணகி சிலை. இவை எல்லாம் ஆங்கிலத்தில் அழகாக நல்ல தாளில் பெரிய