பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அறிமுகம் இவர் எழுத்தாளர் என்பதைக் காட்டிக் கொள்ள எழுதி விற்பனை ஆகாத நூல்களுள் ஒன்றனைப் பிரதி எடுத்துச் சென்று இருக்கிறார். இவர் சட்டைப் பையில் இரண்டு பேனாக்கள்; போலீசு அதிகாரி, கண்டக்டர், மருத்துவர் சிலர் தம் சட்டையில் குத்திக்கொள்ளும் பெயர்களைப் போல அடையாளச் சின்னங்கள். மை படிந்திருந்த அந்தச் சட்டையில் சில சமயம் கருத்துகளுக்குப் போராடியபோது பேனாவை உதறி யதால் ஏற்பட்ட சிதறல்கள்; அதனால் ஏற்பட்ட விபரீதம் அவை. இவர் நிச்சயம் எழுத்தாளர்தான் என்ற முத்திரை அது. 'நீங்கள் விரும்பும் நூல் எழுதலாம் புராணங்கள், பழைய கதைகளைத் தவிர. ஏனென்றால் அவை ஆங் கிலத்தில் பல வெளிவந்துவிட்டன” என்று தகவலுடன் தன் கருத்தை வெளியிட்டார் அதிபர். "எழுதிக் கொண்டிருக்கிறேன்; புதிய சில சிறுகதை கள்; கிளிஞ்சல்களைப் போல்' என்று தன் உருவக ஆற்றலை வெளிப்படுத்தித் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். 'இது பயன் உள்ள எழுத்து; இன்றைய பிரச்சனை கள்; நாட்டு நடைமுறை இவற்றைச் சித்திரித்து எழுது கிறேன். வெற்றிப் படைப்பு' என்று தற்புகழ்ச்சி கலந்த குரலில் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொள்கிறார். பழைய பாட்டு ஒன்று இவருக்கு நினைவுக்கு வருகிறது. 'மன்னனை அணுகிச் சென்றாலும் தன்னை அறியாதவர் இடத்தும் தன்னைத் தானே புகழ்ந்து உரைப் பது தகுதி ஆகும் இந்தப் பாடல் வரிகள் அவருக்குத் தற்காப்புத் தருகின்றன. 'கவலைப்படாதீர்கள்; அணிந்துரை வாங்கி வந்து விடுங்கள்; அச்சிடலாம்' என்று அவர் அறிவுரை தருகிறார்.