பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



120

அறிமுகம்



அவர் அன்புக் கட்டளையிடுகிறார். வசிட்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் வாங்குவதற்கு விசுமாமித்திரர் என்ன பாடுப்பட்டார்; அது இவருக்குத் தெரிந்தது; நிறுவனருக்கு எங்கே தெரியப் போகிறது? .

இவ்வளவு தூரம் தன்னைத் தாழ்வுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை; அங்கிருந்த சில தமிழ் நூல்களை நிறுவனர் மாதிரிக்கு எடுத்துக் காட்டினார்.

ஒருசில புத்தகங்களைப் புரட்டுகிறார். நூறு இருநூறு பக்கங்கள் என்றால் அணிந்துரை பத்து பக்கம், காணிக்கை ஒரு பக்கம்; அதில் பழைய முதியவர்கள் படம்; அவர் கள்பால் ஆசிரியர் வைத்திருந்த மதிப்பு: நன்றிக் கடன்; இவற்றின் விவரங்கள் அடங்கிய பட்டியல் ஆசிரியர் பிறநூல்கள் இப்படித் தேர்தல் போஸ்டர்கள் போல் இடம் பெற்றிருந்தன.

திருக்குறள் ஒன்று; அது இன்று பல தமிழாசிரியர்கள் உரைநூல்கள் தெளிவுரைள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு எழுதியும் அவற்றை அவர்களால் விளக்க முடியவில்லை என்பது ஒரு சான்று அடிமுடி காணாத கதை பாகவதர்கள் சொல்வது நினைவுக்கு வந்தது.

எளிய உரை என்று ஒன்று எழுதி வெளியிடப்பட்டு இருந்தது; திருக்குறளே எளிது என்பதை நிறுவ அது பயன்பட்டது. பிரித்து எழுதாமல் அவர் பண்டைய தமிழ் நடையை அப்படியே நிழற்படம் எடுத்து எழுதியிருந்தார்; எளிய நடை என்று அச்சிட்டு இருந்தது. அது வியப்பாக இருந்தது.

மறுபடியும் அந்த நிறுவனத்தாருக்குச் சரியான பதில் தருவது என்று முடிவு செய்கிறார்.

"ஐயா! இப்படி ஒரு தீர்மானம், அணிந்துரை ஐந்நூறு பக்கம்; நூல் ஐம்பது பக்கம்; இது நூலுக்கு விளம்பரம்; பலரிடம் வாங்கித் தருகிறேன்" என்கிறார்.