பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 போயிருக்கக் கூடாது ஏன் இவர் தன்னை அழைக்கிறார்? ஏன் வற் புறுத்துகிறார். இது இவருக்கு விளங்கவில்லை. 'கட்டாயம் 'அவசியம் இரண்டுக்கும் என்ன வேறு பாடு? சிந்தித்துப் பார்க்கிறார்; விளங்கவில்லை. அவரோடு இவர் பழகியது சில நாள்தான். இவர்கள் பாதிக்கப்பட்டவர்கள்; இவர்கள் சிட்பண்டில் பணம் கட்டித் தொலைத்துவிட்ட ஏமாளிகள்; அதனால் ஏற்பட்ட தொடர்பு. அவர் தன் மகளின் திருமணத்துக்காக என்று கட்டி வைத்தார். அந்த மகளின் திருமணம் இது. இரண்டு பேரும் காவல் அதிகாரிகளுக்கு ஒரே மாதிரி 'பிராது கொடுத்தவர்கள். அதனால் ஏற்பட்ட தொடர்பு. அவருக்குப் பணம் திருப்பித் தரப்பட்டது. இவருக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லை. அது அது அவரவர் அதிருஷ்டம் என்ற தத்துவம் இவரை ஓரளவு அமைதி கொள்ளச் செய்தது. திருமணத்துக்குப் போவது என்றால் எவ்வளவோ சிரமங்கள். ரொம்பவும் நெருக்கமானவர்களாக இருந்தால் அவர் மணம் செய்து கொள்வதற்குப் 'பரிசு தரும் நிர்ப் பந்தம் ஏற்படுகிறது. பாராட்ட வேண்டியதுதான். இதுவும் ஒரு 'குட்டி சிட்பண்டு'தான். திருப்பித் தந்தாலும் தரலாம்; தராமல் போனாலும் போகலாம். ஒரளவு இந்த மொழிமாற்றுகள் அவசியம்தான். ஒசியில் உண்டு மகிழ்வது; அதைவிட இந்த வகையில் வரி வசூலுக்கு ஆட்படுவது நல்லதுதான். இது நகைச்சுவை விருந்து. இந்த அறிமுகத்தோடு எப்படிப் போவது? இறுக்க மான உறவா? இல்லை; போகாமல் இருப்பதா? சே! அந்த