பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 போயிருக்கக் கூடாது இவர் நம்பவில்லை; என்றாலும் கேட்பதற்கு நன்றாக இருந்தது. அது அவருக்கும் சரி' என்று பட்டது. அப்பொழுது வாக்குத் தந்தார். அதற்குப் பிறகு வருந்தியது உண்டு. இப்படிச் சின்ன சின்ன பாதிப்புகளைத் தவிரப் பொது வாழ்வில் பெரிய அக்கரை இவர் காட்டியது இல்லை. டிரைவர் தினமும் அவன் படிக்கிற செய்திகளை அவனால் உள் அடக்கிக் கொண்டிருக்க முடிவது இல்லை. இவரிடம் தான் பேசித் தான் அறிவாளி என்பதைக் காட்ட முயன்றிருக்கிறான், அந்தப் பழக்கத்தில் இவர் அவன் அறிவுரைக்கு இடம் தந்தார். அந்த இடத்தைக் கண்டுபிடித்துச் சேர்வது மிகவும் சிரமமான காரியம் ஆயிற்று; இந்தக் காலத்தில் ஒரு முகவரி யைத் தேடினால் யார் சரியாகப் பதில் சொல்கிறார்கள். 'அவரைக் கேளு எனக்குத் தெரியாது' என்று சொல்லுபவர்கள் தாம் பலர். 'டீ கடையில் கேட்டால் அவன் பதில் சொல்லும் நேரம் அவன் தொழிலில் பாதிப்பு; அதற்குள் சூடான 'டி' ஆறிப்போக வாய்ப்பு, அதனால் இவர்களை மதிப்பதே இல்லை. கஸ்டமர்கள் நெருக்கடி: முகவரி கேட்டுப் பதில் சொல்லிச் சொல்லி ஒரு அலுப்பு: அவன் இவர்களுக்குப் பயன்படவில்லை. எப்படியோ சந்து பொந்துகள் கடந்து அந்த ஒளி மயமான எதிர் காலத்தைக் காண முடிந்தது. யார் யாரோ அங்கு இருந்தார்கள்; ஒருவர் கூடத் தெரிவதற்கு அங்கு வாய்ப்பு இல்லை. இந்த சிட் பண்டு’ அவர் மும்முரமாக உலாவிக் கொண்டிருந்தது தெரிந்தது. எங்கும் உட்காராமல் இராட்டினமாகச் சுற்றிக் கொண்டிருந் ததைக் காண முடிந்தது. அவரை அடையாளம் தெரிய வில்லை.