பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தூண்டுதல் அவர்கள் சாதனைகளைச் சுட்டிக்காட்டும் சிறப்புகள் சேர்த்து முன் இருக்கும் அவர்கள் தூங்காமல் இருக்க அழைத்துவிட்டுப் பின் தன்னை அக்கூட்டங்களுக்கு அழைத்தமைக்கு நன்றி கூறுவதைக் கவனித்து இருக்கிறார். முன்னால் இருந்த நாற்காலிகள் தெரிகின்றன; அதில் உட்கார்ந்திருந்த புள்ளிகளை இவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. - இவர் தலைவர்; ஆகையால் பேச்சாளர்களை அறி முகப்படுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டிய தாயிற்று. அந்தப் பெயர்களும் அவரைப் பொறுத்தவரை அந்நிய நாட்டுப் பெயர்களாக இருந்தன. பழக்கமில்லை. அச்சடித்த அழைப்பிதழ் அவர் கையில் எடுத்துக் கொண்டார். அந்த வரிசையில் பெயர்களை வைத்து அவர்களை விளித்தார். பிறகு அங்கிருந்த மகளிர் பக்கம் பார்த்தார். தாய்மார்களே என்றார். மற்றவர்களை நண் பர்கள் ஆக்கிக் கொண்டார். கூட்டத்துக்கு வந்தவர்கள் எழத் தொடங்கினார்கள்: தாம் வந்தது வேறு கூட்டமோ என்ற ஐயம் அவர்களுக்கு அதனால் எழ ஆரம்பித்தனர். - - - இவர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்ட பேச்சாளர்கள் என்று நினைத்துக் கொண்டு மேடையில் அமர்ந்திருந்த பெருமக்கள் தமமை அழைக்காம்ல் இருந்ததற்கு வருத்தம் அடையவில்லை. * * அதன்பின் தன்னை அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்க அழைத்தமைக்கு நன்றி கூறத் தொடங்கினார். அந்தக் கூட்டத்தின் இயக்குநர் அதாவது சங்கச் செயலாளர் பேச்சாளர் கையில் இருப்பது அவர் ஒப்புக் கொண்ட மற்றொரு கூட்டத்தின் நிகழ்ச்சிநிரல் என்பதை அறிந்து கொண்டார். உடனே வந்து அவர் மானத்தைக்