பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 143 திருப்தி. தொட்டுத் தொட்டுப் பழகிய பிறகு வெட்டிப் போட மனம் வரவில்லை. எப்படியாவது வளரட்டும் என்று விட்டு விட்டேன். என்னைப் பார்த்து என் நண்பர்கூட வளர்க்க ஆரம்பித் தார்கள். முடியவில்லை; அவர்கள் வீட்டில் எதிர்ப்பு வந்து விட்டது. அது விளைவிக்கும் குத்துச்சண்டையை அவர் களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சத்தம் செய்யாமல் அவர்கள் இளைஞர்கள் ஆகி விட்டார்கள். நான் வளர்த்த அருமை தாடிக்கு என் மனைவி மறுப்பே சொல்லவில்லை; நிச்சயம் நான் விரைவில் சாமியாராகி விடுவேன் என்ற நம்பிக்கை அவளுக்கு; அதனால்தான் அவள் என்னை எதுவும் சொல்லவில்லை. காவி உடை ஒன்று அவளே வாங்கிக் கொண்டு வைத் திருந்தாள். தாடி' என்று என்னை அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். எங்கள் வீட்டைத் தாடிகாரர் வீடு' என்று சொல்லி வந்தார்கள். தாடி என்று சொன்னால் நேரே என் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடுவார்கள். எனக்கு இந்தத் தாடி மீது வெறுப்பு வந்து விட்டது; யாரும் என்னிடம் கிண்டலாகப் பேசுவதை நிறுத்தி விட்டார்கள்; அளவுக்கு மீறி மரியாதை காட்டினார்கள். "தாத்தா என்ற புதிதாகப் பிறந்த ஐந்து வருஷம் ஆன பக்கத்து வீட்டுக் குழந்தை என்னை அழைக்க ஆரம் பித்தது. யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தது என்று கேட்டேன். என் மம்மி என்றது. அந்த அம்மையார் கொஞ்சம் அழகாகவே இருந்தார்கள். திருப்பதிக்குப் போவது என்று முடிவு செய்து விட்டேன். இங்கே லோக்கல் சலூன்களில் அதைத் தொட மறுத்து விட்டார்கள். உங்களுக்கு இது நன்றாக இருக்கிறது என்று மறுப்புச் சொல்லி வந்தார்கள். தாடியைப் பறி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். அடிக்கடி தொட்டுப் பார்ப்பேன்; பழகிய தோஷம்.