பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நாரத முனிவரின் பூலோக யாத்திரை 'உலகத்திலேயே பொடி டப்பாக்கள் இந்தியாவில் தான் தயார் ஆகின்றன; அதுவும் கும்பகோணம் இதற்குப் பேர் போனது' என்று அவர் சொல்லித் தெரிந்து கொண்டார்கள். நாரத முனிவரின் பூலோக யாத்திரை பற்றிப் பல பத்திரிகையில் முன்னறிவுப்பு வந்திருந்தன. அவரை வர வேற்க வழக்கம்போல் வருகின்ற கட்சிக்காரர்கள் யாரும் இல்லை. பத்திரிகைக்காரர்கள் ஏராளமாக வந்து குவிந்திருந்தார் கள். ஒரு சின்ன பெண் பூச் செண்டும் மாலையும் கொண்டு வந்து முன் நின்றாள். நாரதர் முன்விழிப்போடு மறுத்துவிட்டார். அவர் பார்த்த தமிழ்ப் படங்களில் பூச் செண்டில் 'பாம் வைத் திருப்பதைப் பார்த்திருக்கிறார். மாலை துண்டு எதுவும் கூடாது என்று உறுதியாக இருந்தார். ராஜீவ் காந்தியைக் கொல்லச் செய்த சதி. இதில் இருந்து அவருக்கு இப்படி ஒரு பயம் ஏற்பட்டு விட்டது. மறுநாள் பத்திரிகையில் மாலைகள் ஏற்காத பிரமுகர் என்று விளம்பரம் தரப்பட்டது. கின்னஸ் புத்தகத்தில் அவர் பெயர் இடம் பெற்றது என்று கேள்வி. பக்த கோடிகள் சிலர் அவரைத் தரிசிக்க வந்திருந் தனர். அவருக்கு ஆரத்தி எடுத்துக் கர்ப்பூரம் கொளுத்தி வழிபட்டு வழி விட்டனர். "ஏன் சுவாமி தங்கள் பூலோக விஜயம்?' என ஒரு குட்டிக் கலை விமர்சனப் பத்திரிகை ஒன்றுபேட்டியில் கேட்ட கேள்வி இது. -