பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் - 159 எங்கள் பழைய பல்லவி எடுபடாது. தெய்வங்களை நம்புவதை விட்டு உழைப்பை மதிக்கக் கற்றுக் கொண்டோம்; நீ இந்திரன், சந்திரன் என்று இந்த இரண்டு பெயர்களைச் சொல்வதில் அலுத்துவிட்டோம்.' 'டி.வி.யில் கந்தபுராணம் போடுகிறோமே அது பற்றி உங்கள் அபிப்பிராயம்?" 'மனுஷனைப் பற்றிப் பேசும் காலம் இது; மனு ஷனைச் சந்திக்கப் பயப்படுகிறீர்கள். மக்களைத் திசை திருப்ப எங்கள் கதைகளைப் போட்டுக் கொண்டு இருக் கிறீர்கள்'. அதற்குமேல் இவரைச் சற்றுப் பேசவிட்டால் விபரீத மாகி விடும்; அயோத்தியில் கோயிலைக் கட்டத் தேவை இல்லை என்று சொன்னாலும் சொல்லி விடுவார் போல் இருந்தது ஜன கண மன பாடி முடிக்க விரும்பினாள் அந்த மனோகரி. 'இக்கால இளைஞர்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி ஏதாவது?" “எத்துறையில்' என்று அவர் திருப்பிக் கேட்டார். 'அறிவுரை?' "அறவுரைகள் சொல்லிப் பழகிய எனக்கு அறிவுரை கூறத் தெரியாது. அதற்கு அனுபவம் தேவை, மண் ணுலகில் வாழ்ந்து அவர்கள் பிரச்சனைகளை அறிந்துதான் அறிவுரை கூறமுடியும். அறவுரைகள் கூறக் கீதை, குறள், நீதிநெறி, நல்வழி ஏராளம் உள்ளன. கற்றுத் தர யான் வரவில்லை; கற்றுக் கொள்ளவே வந்திருக்கிறேன்' என்று கூறி முடித்தார். இந்தச் சந்திப்பு புதுமையாக இருந்தது. நாரதரின் தேவ கானம் கேட்பது போல இருந்தது.