பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 161 'சத்தியலோகம் வைகுந்தம் கயிலாயம்?' 'அந்த செட்டுகளை எடுத்துப் போட்டுவிட்டார்கள்; மருத நாயகம் படப்பிடிப்பு நடக்கிறது'. அவருக்கு திக்கென்று தூக்கி வாரிப்போட்டது. அதற்குமேல் அவருக்கு விசாரிக்க விருப்பம் எழ வில்லை. 'வந்த விஷயம்?" 'வெளிநாட்டு மூலதனம் நிறைய கொண்டு வந்திருக் கிறேன். கடத்தல் படங்களை எடுக்க விரும்புகிறோம்' என்றார். 'அனுமதிக்க முடியாது” என்றார். "நாங்களே இந்த வன்முறைப் படங்களைக் கட்டுப் படுத்த வழி தெரியாமல் வாடுகிறோம். நீர் இவற்றை மேலும் வளர்க்க இடம் தரமுடியாது. பக்திப் படங்கள் வேண்டுமானால் பிடிக்கலாம்' என்று அறிவுரை தந்தார். "எங்கள் இளைஞர்கள் துடித்துக் கொண்டு இருக் கிறார்கள். ஆதிகாலத்தில் இராவணன் சீதையைக் கடத்தி யது முதல் கடத்தல் படம். அப்புறம் இதைப் போலப் படங்கள் வரவில்லை என்று ஏங்குகிறார்கள்' 'இந்தப் படங்களால் கோடிக்கணக்கான டாலர்கள் வந்து குவியும்' என்றார். காந்தியின் படம் பிரதமர் முன்னால் இருந்து அவரைத் தடுத்தது. 'முடியாது' என்று சொல்லி மறுத்து விட்டார். 'அசத்தியங்களுக்குப் பாரதம் துணை போகாது” என்று சொல்லி முடித்தார்.