பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 163 லோகம் திரும்பிச் சென்றார். வழி அனுப்ப அவர் யாரை யும் எதிர்பார்க்கவில்லை. வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. அவர் யாத்திரை விளம்பர முத்திரையின்றி முடிந்தது. படம் எடுக்க அனுமதி கிடைக்கவில்லை; மூலதனம் தவறான வழிகளுக்குப் பாரதம் ஏற்காது என்று தெரிந்து கொண்டார். தொழில் வளர்ச்சிக்காகத்தான் வெளிநாட்டு மூல தனம் வரவேற்கப்படும் என்ற செய்தி அறிந்து மனநிறை வோடு திரும்பிச் சென்றார். 26 நவீன தெனாலிராமன் அவன் அறிவாளி; ஆனால் புத்திசாலி அல்ல; அவன் போக்கும் விமரிசனமும் தனி; மற்றவர்கள் நினைப்பது போல் செய்வது போல் அல்லாமல் புதுமையாக ஏதாவது செய்துவிடுவான்; பேசிவிடுவான்; அதனால் அவனைத் தெனாலிராமன் என்று அழைத்தார்கள். புரியாமல் மண்டு வாக இருக்கும்போது 'மாங்காய் மடையன்' என்றும். சொல்வார்கள். 'நீ ஒரு மாங்காய் மடையன்' என்பார் அவன் தந்தை. - 'அப்படியானால் தேங்காய் மடையன் யாருப்பா என்று குழைந்து கேட்டான்.