பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 17 3 சொந்த வீடு அவன் அதை எதிர்பார்க்கவில்லை; விளம்பரம் அவனைத் துண்டியது. - "வீடு இல்லாதவர்க்கு வீடு' இது விளம்பரம். 'உன் பெயரில் வீடு நகரில் இங்கே இருக்கக் கூடாது; உன் மனைவி அல்லது வாரிசுதாரர். இவர்களின் பேரில் எந்த இதர வீடும் இருக்கக் கூடாது' இது விளம்பரம். அதிருஷ்ட வசமாக அவனுக்கு எந்தச் சொத்தும் இல்லை; அவன் அப்பா அம்மா அவனை நடுத் தெருவில் விட்டிருந்தார்கள்; அவன் சொந்த முயற்சியில் காப்பி அடிக்காமல் தேர்வுகள் எழுதிக் காசு கொடுக்காமல் உத்தி யோகம் சம்பாதித்தவன். வீட்டு வாரியம் வெளியிட்ட விளம்பரம் அது, புதிய விஸ்தரிப்புகள் பொட்டல் காடுகள் அவற்றை மட்ட விலைக்கு வாங்கிச் சாலைகள் போடாமல் வரைபடம் வரைந்து ஒதுக்கப்பட்ட மனைகள்; அவற்றில் வங்கிக் கடன் பெற்று அங்குல அளவில் அளவிட்டு அடுக்கு மனைகள் கட்டுகிறார்கள். அவற்றுள் இது ஒரு விளம்பரம். இவன் எங்கே எதிர்பார்த்தான்; குலுக்கல் முறையில் பரிசுகள் கிடைக்கும் காலம் இது. இவன் அதற்கு எப்போதுமே முனைந்தது இல்லை.