பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சொந்த வீடு புதிய கட்டிடம்; ஆனால் போன பிறகுதான் தெரிந்தது; தீர்க்க தரிசனத்தோடு அந்த வீட்டைக் கட்டி இருக்கிறார்கள். அந்த வீடு யாருக்குமே சொந்தம் இல்லை. ஆறு பேருக்கும் சொந்தம். பிளாட்டு எண்கள் கொடுக் கப்பட்டிருந்தன. முன்னும் பின்னும் எங்கும் கொட்டிய குப்பைகள், யாரும் கவலைப்படத் தேவை இல்லை; இவர்கள் யாருமே ஒனர் இல்லை; அதனால் அங்கு வீட்டு முன் ஒரு நடமாடும் சலவைச் சாலை வைக்கப் பட்டிருந்தது; அவன் யாரையுமே அனுமதி கேட்டதாகத் தெரியவில்லை. பொதுச் சொத்து; யாருக்குமே உரிமை இல்லை. நகரங்களில் பழைய வீடுகளை இடிப்பது புதிய வீடுகளை உயர்த்துவது இது நடைமுறையாகிவிட்டது: அதனால் எப்படியும் சில வருஷங்களில் இதையும் இடித்து வேறு வகையாகக் கட்டுவார்கள்; அது தெரிந்து தீர்க்க தரிசனத்தோடு கல்லை மட்டும் சாமர்த்தியமாக ஒட்டவைத்திருந்தனர். அது அங்கங்கே வெடிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது. சிமெண்டு அதிகம் கலக்க வில்லை என்பது பரிசோதனையில் வெளிப் பட்டது; வீடு விழாது; அதன் தவணைகள் கட்டி முடிக்கும் வரை தாங்கும் என்ற உறுதிப்பாடு இருந்தது. வீடு இடிந்தால் என்ன? செத்தால் இன்சூரன்ஸ் தந்துவிட்டுப் போகிறது; பிழைத்தால் காலி மனை இருக் கிறது; நல்ல விலைக்கு விற்றுவிட முடியும். 'வீட்டை வாங்கிப்பார்; அதைக் குடித்தனம் விட்டுப் பார்” என்ற புதிய பழ மொழியை அவனால் படைக்க முடிந்தது. வீட்டுக்கு ஆள் வருவது சிரமாமகத் தான் இருந்தது. ஏன் என்றால் கட்டிய வீடுகள் இரு நூறு; அப்பொழுது அனைத்தும் காலியாக இருந்தது.