பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 23 'உங்களால் எழுத முடியாவிட்டால் நான் எழுது கிறேன். நான் படித்த பள்ளியில் அழகாக எழுதத்தான் கற்றுத் தந்திருக்கிறார்கள். கான்வென்டு படிப்பு' என்று தன் பெருமையைப் பகிரங்கப் படுத்தினாள். 'நம் ஊர் ஒவியர் விளம்பரப் பலகை எழுதுகிறார். அவர் எழுதினால் கவர்ச்சியாக இருக்கும்; நீலப் பின்னணி, வெள்ளை முன்னணி பார்டர் போட்டு எழுதினால் கண் கொட்டாமல் பார்த்து இந்த வீட்டுக்கு உடனே வருவார் கள்' என்றுரைத்தான். 'ஏன் அவர் படம் எழுதுவது?” 'விளம்பரம்தான் இன்று காசு, இப்பொழுது அரசு தமிழில் விளம்பரம் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். நல்ல காசு' தேவை இல்லாத விஷயம் இது; இதைப் பற்றி இவர்கள் பேசினார்கள். அடுத்தது அவர்கள் தாவியது ரியல் எஸ்டேட்டுக்குச் சொந்தக்காரர்கள்; அவர்களுக்கு என்று இருக்கும் எஸ் டேட்டு ஒரு மேஜை, சுற்றியும் எளிதாக நகர்த்தக் கூடிய பிளாஸ்டிக் நாற்காலிகள்; வீட்டுக்காரர் உதவிய ஒரு தொலைபேசிக் கருவி; அவர்களைச் சுற்றி இயங்கிய உதவியாளர்கள். "வீடு வாங்க விற்க எங்களை அணுகுங்கள்' என்ற விளம்பரம் அங்கே தொங்க விடப்பட்டிருந்தது. இவர்கள் போட்டிருந்த 'டு லெட் பலகை அவர் களை இவர்களிடம் அணுகச் செய்தது. அவர்கள் இந்தக் கையில் ஒரு பகுதி, அந்தக் கையில் மற்றொரு பகுதி, இரண்டு கை தட்டினால்தான் ஒசை என்பது அவர்கள் கோட்பாடு; அதைச் சொல்லி அவர்கள் இவர்கள் சுமையை ஏற்றுக் கொண்டார்கள்.