பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 எல்லை கடந்த நிலை கிறோம். கற்பிக்கிறோம். இளைஞர்கள் அவர்கள் இன்று மாறி விட்டனர். 'உலகக் குடிமகன்' என்று தன்னை ஆக்கிக் கொள்கிறார்கள். எல்லை கடந்த நிலை இது' என்று அந்த வியாட்நாம் வீட்டுச் சுந்தரம் தன் கருத்தை வெளியிடுகிறார். எங்கிருந்தாலும் அவர்கள் தமிழ்க் குடி மக்கள்தான் என்று சொல்லித் தன்னைத் தேற்றிக் கொண் டார். செடி ஒன்றுதான். மண் வேறு; அவ்வளவுதான்' என்று நியாயப்படுத்தினார். எதற்கும் உவமை யாராலும் படைக்க முடிகிறது. அது அவருக்குச் சமாதானம் அளிக் கிறது. 5 தவறு திருத்தப்பட்டது வயதானவர்கள்; அதனால் அவர்கள் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் ஆயினர். உண்டதுபோக எஞ்சியது சேர்த்து வைக்க வேண் டிய அவசியம் ஏற்பட்டது. பணத்தைத் துக்கி எறியவா முடியும். எப்படி அவர்களால் சேமித்து வைக்க முடிந்தது?. பிக்கல் பிடுங்கல் இல்லை. அவர்கள் எடுத்துக் கொண்ட உறுதியில் திருநீலகண்டர் ஆயினர். குழந்தைகள் பெற்றுக் கொள்வது இல்லை என்பது அவர்கள் எடுத்துக் கொண்ட முடிவு. காரணம் அவர்கள் மண வாழ்த்தில் தரப்பட்ட அறிவுரை அது.