பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 49 சாவு என்பது வெறும் உறக்கம்தான்; இதைக் கண்டு நீ ஏன் கவலைப் படுகிறாய்” என்று அவர் கூறியது நினைவுக்கு வருகிறது. - அவன் கவிஞன், பேனா எடுக்கிறான். "மரணத்தின் வாசலில்' என்று ஒரு கவிதை எழுதுகிறான். தான் இறந்த பிறகு யாராவது வெளியிடட்டும் என்று எழுதி வைக்கிறான். தான் இருந்து எழுதும் பூங்காவைப் பார்க்கிறான்; பசுமையாய் இருக்கிறது. இங்கேதான் பல கவிதைகளை இருந்து எழுதினான். இப்பொழுது அந்தக் கவிஞன் மறைகிறான். அவன் ஒரு ஆபத்தில் புகுத்தப்படுகிறான். வெள்ளைக் கலை உடுத்தி வெள்ளை நிறம் பெற்று வேளா வேளைக்கு வந்து கவனித்து வரும் நர்சுகள் இவனை விசாரிக்கிறார்கள். இவன் ஒரு கவிஞன் என்று அறிமுகப் படுத்தப்படுகிறான். இவனை ஒரு பரிதாபகரமான பார்வை யில் நோக்கினார்கள். அவனை வியக்கிறார்களா விமர்சிக் கிறார்களா தெரியவில்லை; வருகிறவர்களுக்கு எல்லாம் அவன் கவிதை நூல் பிரதி ஒன்றனைக் கொடுத்து வந்தான். "கலைஞரைக் கொண்டு கவிதை நூல் வெளியீடு நடத்தப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந் தான். அதனால் அவன் மதிப்பு உயர்ந்தது. அந்த நம்பிக்கை அவனை வாழ வைத்தது. இறப்பு கவிஞனை அணுகாது; தான் மறைந்தாலும் தான் எழுதி வைத்த கவிதைகள் பேசிக் கொண்டே இருக்கும் என்று தெரிவித்துக் கொண்டிருந்தான். கவிஞனுக்கு என்றுமே மரணம் இல்லை. அவன் கவிதை வாழும். அவன் வாழ்வான் என்று பேசினான்; மரண அச்சம் அவனை விட்டு நீங்கியது.