பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சுமை குறையாது கழுவ வேண்டும். எல்லாம் தொல்லைதான்' என்று மேலும் ஆறுதல் கூறி வலிய சில கருத்துக்களைக் கூற நேர்ந்தது. 'பிரேக் அதை நம்பி இருக்கும் அந்தக் கார் அதை நிறுத்தத் தவறிவிட்டது; சரி விடுங்க சார்; இதற்கு எல்லாம் கமிஷன் வைக்கவா முடியும்? அவர்கள் ஏதாவது ரிப்போர்ட் தர அது குழப்பத்தை உண்டாக்க அப்புறம் பெரிசா போயிடும்' 'அரசுகலையும் என்று சொல்லப் போகிறீர்; அவ்வளவு தானே! உங்களோடு பேசியது கொஞ்சம் ஆறுதல்தான்' என்று நண்பர் தெரிவித்தார். 'சரி விடுங்க; கிளப்புக்கு வாங்க; ரெண்டு "பெக்' அடித்தால் சரியாப் போகுது' என்று கூறிப் போனை வைத்தார். "சுமைகள் குறைய மேல்மட்டம் பெக் அடிக் கிறது. இந்தத் தரைமட்டங்கள் நச்சு மதுவை நாடுகின்றன. அவர்கள் சுமைகள் குறையப் போவது இல்லை; இந்தச் சாவுகள் நிற்கப் போவதும் இல்லை. 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" 'சொல்வதற்கு என்ன இருக்கிறது? அவர்களுக்கு நல்ல சாராயம் கிடைக்க வசதிகள் செய்து தரவேண்டும்'. s?