பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள் 65 பிடித்தால் எதையும் சாதிக்க முடியும் என்பது அவன் அசையாத நம்பிக்கை. இந்த மாஜி அமைச்சர் அதாவது மாஜி பேராசிரியர் இவரை மதித்து ஒரு மாணவன் அணுகுகிறான் என்றால் அவர் உச்சி குளிர்கிறது. பனிக்கட்டி தலையில் வைத்தது போல் என்று உவமை கூறுவார்கள். அதற்குப் பொருள் அவன் செய்கையால் விளங்கிக் கொள்ள முடிகிறது. 'சரி! நான் ஒரு கடிதம் தருகிறேன்; என்னுடன் அதே தொழில் செய்தவர் இன்னும் அங்கு அதே தொழிலைச் செய்து கொண்டிருக்கிறார். அவரைப் போய்ப் பாரு' என்று கூறுகிறார். 'சிபாரிசுக் கடிதம்' என்று அவன் நினைக்கிறான். இந்தக் காலத்தில் யார் யாருக்கு சிபாரிசு செய்ய முடிகிறது? எல்லாம் காசுதான். அந்த வார்த்தையை அதற்குச் சேர்ப்பது பொருத்தம் இல்லை என்று அவர் கூறுகிறார். அமைச்சர்கள் தரும் சிபாரிசுக் கடிதங்கள் அவையே வெறும் கண்துடைப்பு: வருகிறவர்கள் நெருக்குகிறார்கள்; சரி 'அணுக்கர் எழுதுகிறார். இவர் கையெழுத்து இடுகிறார். அமைச்சரிடமே கடிதம் வாங்கிக் கொண்டோம்; கவலை விட்டது என்று அனாவசியமாகப் போகிறார்கள். நடப்பது என்ன ? 'பார்க்கலாம் கடிதம் வச்சிருக்கேன்' இப்படித்தான் பதில்கள் வருகின்றன. அந்த அதிகாரிக்குத் தெரியும். அது 'வெறுந்தாள்' என்பது. இந்த மாஜி ஆசிரியருக்கு சிபாரிசு தரும் தகுதி இல்லை என்பது அவருக்கும் தெரியும். என்ன செய்வது? அவன் தெய்வ நம்பிக்கை அதை ஏன் கெடுப்பது; எழுதித் தருகிறார்.