பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 எப்படி முடிப்பது 'இல்லை; அதிலே புகுந்து முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆசை” என்பான். Wanted என்று யாரும் விளம்பரம் செய்யவில்லை. கதைகள் தேவை என்று யாரும் இவனை அழைக்க வில்லை. அவனுக்கு ஒரு ஆசை கதை எழுதுவது என்பது;. யார் அவனைத் தடுக்க முடியும்? தாள்கள்; ஒருபேனா, இவை அவன் மூலதனம். அவன் எழுதுகோல் ஏந்தினாலே மற்றவர்கள் அஞ்ச வேண்டியதுதான். கதைகள் அவன் மையில் கசிந்து வெளி வந்து கொண்டிருந்தன. 'இதோ பாருங்க. நான் கதை சொல்றேன். அந்த டைரக்டர் எங்கே கவனிக்கிறான்? 'லொகேஷன்', 'சிச்சுவேஷன்', 'டிஸ்கவடின் இப்படி ஏதோ அவன் அகராதியே தனி; காது கொடுத்துக் கதையைக் கேட்டால் தானே சொல்ல முடியும்' என்று தன் புலம்பலை வெளியிடுகிறான். இவன் வாயசைத்துச் சொல்லி இருக்கிறான்; கை யசைத்து நடித்தும் காட்டி இருக்கிறான். அது அரு வருப்பாக இருந்தது. இவனை அவர் கவனிக்கவே இல்லை. எழுதிய கதை வீணாகப் போகக் கூடாது? அது அவன் கவலை. யாராவது ஒருவர் கேட்டால் அது போதும். அது அவன் எதிர்பார்ப்பு. அவன் படிக்கிற காலத்தில் பஸ் டிக்கட் வாங்கித் தந்து இருக்கிறான். இவரிடம் அன்று சில்லறை இல்லை; அந்த நன்றி; கதையைக் கேட்பது என்ற அவசியம் ஏற் பட்டது.