பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கடைசி வரை 13 கடைசி வரை 'வீடு வரை உறவு; வீதி வரை மனைவி; காடு வரை பிள்ளை; கடைசி வரை யாரோ?' இது கண்ணதாசன் வினா. தாம்பத்தியம் என்பது எதுவரை? இதற்கு இவன் விடை காண முயற்சிக்கிறான். எதுவரை இந்தத் தாம்பத்தியம்? அது என்ன பயித்தியம்? இவனுக்கு விளங்கவில்லை; பயித்தியமா, பத்தியமா எதுவரை சாத்தியம்? இவர்கள் பாசம் நேசம் எதுவரை தாக்குப் பிடிக்கிறது. இந்த வினா இந்த இளை ஞனுக்கு எழுகிறது. இவனுக்கு ஏன் இந்த ஆராய்ச்சி? புதிரா, புனிதமா' என்ற நிகழ்ச்சியை இவன் இரவு பத்து மணியளவில் மற்றவர்கள் உறங்கிய பிறகு மெதுவாக ஒலிக்க விட்டு ஒரிருமுறை கேட்டதன் விளைவு இது. இந்த டாக்டர் ஏன் சினிமாப் பாட்டுகளை உடன் ஒப்புவிக்கிறார். தெரியவில்லை. மற்றவர்களை மகிழ்விக்க நினைக்கிறார். தான் ஒரு சினிமா ரசிகர் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்புகிறார். பரிதாபகரமான காட்சி.