பக்கம்:கி.வா.ஜ வின் சிலேடைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி.வா.ஜ.வின் சிலேடைகள் l 9

- ஏன் ?' என்று அன்பர் கேட்டதற்கு வந்த பதில், அடுத்தபடி ஒரு நண்பர் வீட்டுக்குப் போகப்போகிறேன். அங்கே ஏதாவது சாப்பிடக் கொடுப்பார்கள். இங்கே சாப்பிட்டாய் விட்டது, வேண்டாம் என்டேன். என்ன சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்பார்கள். நீங்கள் முதலில் பழமும் பிறகு பாலும் தந்தால் பழம்பால் சாப்பிட்டேன்’ என்பேன். அவர்கள், 'ஏன், அங்கே புதுப்பால் கிடைக்க வில்லையா? என்று கேட்பார்கள். அப்படிக் கேட்க வகை வின்றி, பால் பழம் கொடுத்தார்கள்' என்று சொல்லலாம் அல்லவா?” r

நீடாமங்கலம்

நீடாமங்கலத்துக்கு இவர் போயிருந்தார். ஊர்களின் பெயர்களுக்கு என்ன காரணம் என்று அங்கங்கே விசாரித்துத் தெரிந்து கொள்வது இவர் வழக்கம். ஒர் அன்பரை, “இந்த ஊருக்கு நீடாமங்கலம் என்ற பெயர் ஏன் வந்தது?' என்று கேட்டார். அவர், 'தெரியாது; ஆனால் ஒர் ஆசாமி சொன்னதைக் கேட்டுக் கோபமாக வந்தது' என்றார்.

"அவர் என்ன சொன்னார்?’’

'அவர் அயலூர்க்காரர். இந்த ஊரில் யாரோ அவருக்கு வேண்டாதவர் இருக்கிறார்போல் இருக்கிறது. இந்த ஊரில் மங்கலம் நீடாது, நீடாத மங்கலம் இது என்று சொல்லி விட்டுப் போனார். அதுமுதல் இந்தப் பெயருக்கு நல்ல அர்த்தம் சொல்ல முடியாதா என்று நான் ஏங்குகிறேன்.'

'இன்று சொற்பொழிவில் விளக்குகிறேன்' என்றார் இவர். அப்படியே சொற்பொழிவைத் தொடங்கும்போது, 'இந்த ஊரில் எப்போதும் மங்கலம் நீண்டு வாழும். நீடு

ஆம் மங்கலம் உடைய ஊர் இது' என்று விளக்கினார்.

என் கால்

அந்தப் பையன் ணகரத்தை னகரமாகவும், னகரத்தை .ணகரமாகவும் உச்சரிப்பான், ம ன் ன ைன ம ண் ண ன்