பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

ஆயிரக் கணக்கான மனிதர்களுக்கு முன்னே பேசுகிறோம். என்று நினைத்துக்கொண்டு, பேசுகிறோம். இந்தக் கட்டுப் பாடுதான் ஒவ்வொரு நிமிஷத்தையும் ஒவ்வொரு யுகமாகச் செய்கின்றது.

ரேடியோவின் முன்னிலையில் ஒவ்வொரு நிமிஷத்துக் கும், ஏன்? ஒவ்வொரு கணத்துக்கும் விலை உண்டு; மதிப் புண்டு. காலத்தின் அருமையைத் தெரிந்துகொள்ள வேண்டு. மானால் வானொலி நிலைகத்திலே கற்றுக்கொள்ளலாம்.

2 -

வானொவிப் பிரசங்கத்தைப் பேச்சு என்றுதான் குறிக்கிறார்கள். ஆனால் அது ஒரு விதத்தில் கட்டுரையைப் போல இருக்கிறது. நன்றாகச் சிந்தித்து விஷயத்தைக் கோவையாக அமைத்து முதல், நடு, இறுதி என்ற வக்கணை யுடன் விளங்கும்படியாக எழுதுவதனால் அதைக் கட்டுரை யென்று சொல்லலாம். மேடைப் பிரசங்கத்தைக் காட்டிலும் அதில் செறிவு அதிகம் இருக்கிறது. ஒரு மணி நேரம் மேடை யிலேறிச் செய்யும் பிரசங்கத்தை, ஒரு விஷயத்தைக்கூட விடாமல் பதினைந்து நிமிஷ் ரேடியோப் பேச்சாகப் பேசி விடலாம். -

ஆனால் அது வெறும் கட்டுரையாக இருந்துவிட்டால் படித்து இன்புற முடியுமேயன்றிக் கேட்டு இன்புற முடியாது. செறிவு மிகுதியாக இருந்தால், கேட்கும் ஜனங்கள், நாம் ஒரு வாக்கியத்தில் சொன்ன கருத்தை ஜீரணம் செய்து கொள்வ தற்குள் மேல்வரும் பல கருத்துக்களை நழுவ விட்டுவிடுவார். கள். ஆகவே கட்டுரைகளைப் போலப் பல கருத்துக்களை ஒன்றன்மேல் ஒன்றாகச் செறித்து அமைப்பது ரேடியோப் பிரசங்கத்துக்குப் பொருந்தாது. ஒரே விஷயத்தைச் சிறிது விரிவாக-மேடைப் பிரசங்கத்தைப் போலச் சொல்ல வேண் டும். ஆனால் அந்த விரிவு அளவு கடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தச் திரிசங்கு சுவர்க்கத்தில்